உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 அபூஜஹிலின் நிலை எடுத்துக் காட்டு. இதுதான் கெடுமதி யாளர்களுக்குக் கிட்டுகின்ற முடிவு. இனி நபிகள் நாயகம் அவர்களை வெல்ல முடியாதென்று அவன் அறிவு பகர்கின்றது. தேடிக் கண்டு பிடிக்கவும் இயலாது என்றும் தெரிந்திருக்கின் றாள். ஆனால், தான் ஏவி விட்ட தீய சக்திகளைத் தடுத்து நிறுத்த அபூஜஹிலால் ஆகவில்லை. எனவே, அவர்களுடன் ஒத்துழைப்பான் போன்று நடிக்கின்றன், ஊரார் முன் நலல வன் போல் நடித்து நம்ப வைக்கின்ற அபூஜஹில்! அவனால் ஏவப்பட்ட கூட்டம், ஆலயத்திடத்தும், நபித்தோழர்கள்தம் அணிமனையிடத்தும், சோலையின் இடத்தும், அருகே உள்ள சிற் றூர் இடத்தும், மலைகளிடத்தும், கூரியமுட்கள் நிரம்பியாத்தம் காட்டினூடும் புகுந்து புகுந்து தேடி அலைகின்றனர். இப்படி அலைந்த கூட்டத்தில் ஒரு பகுதி, நபிகள் நாயகம் அவர்களும், அபூபக்கர் சித்திக் அவர்களும் உறைந்து திகழ்கின்ற தெளறு மலைக் குகையை நோக்கி வருவதை அபூபக்கர் கண்டார்கள். நாயகத் திருமேனி அவர்களிடம் கூறினார்கள், "நாம் இருவர் தாமே உள்ளோம்; என்ன செய்வது" என்று. எதிரிகள் தம் மைச் சூழ்ந்திருக்கின்ற அந்த வேளையிலும், சிறிதும் அச்ச மின்றி நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள், "நாம் இருவ ரில்லை; சர்வ வல்லமையுடைய ஆண்டவனும் நம்மோடிருக் கின்றான்” என்று. எதிரிகள் மலைக்குகை வாயின் முன்பு வந்து விட்டார்கள்! தாங்கள் தங்கியுள்ள குகை வாயிலிலே வந்து நிற்கின்ற எதிரிகளின் முழங்கால்களின் கீழ்பகுதி தெரிகின் றது. குனிந்து குகைக்குள் நோக்குவாராயின், தாங்கள் இருப்பதை அவர்களால் கண்டு கொள்ள முடியும். இந்த நிலை யிலும், அச்சமற்று ஆண்டவனைத் துதித்தவர்களாக நபிகள் நாயகம் அவர்கள் இருக்கின்றார்கள் அவர்களைப் பின்பற்றி ஒழுகுகின்றார்கள் அபூபக்கர் சித்திக் அவர்கள். வந்தோரில் ஒருவன் சொன்னான்; "குகைக்குள் சென்று பார்ப்போமே" என்று. இன்னொருவன், "குகையின் நுழைவாயிலை முழுமை யாக அடைந்தவாறு, 'சிலந்தி வலை பின்னி வைத்துளதே; ஆள்நுழைந்திருப்பின், இச் சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண் "