உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 றைவனின் தூதுவராக வந்தவர்கள் நபிகள் நாயகம் அவர்கள். அவர்கள் இனிய வரலாற்றினை இயம்புவதின் மூலம், இறைபக்தியை நிலைநாட்ட எழுந்த காப்பியம் சீறாப் புராணம். அதனுடைய மூன்றாங்காண்டமாகவும், முற்றக் காண்டமாகவும் உள்ளது ஹிஜரத் காண்டம்.அதன் நுழைவாயி லைத் தாண்டியுள்ளோம், நபிகள் நாயகம் அவர்களும், அவர் கள்தம் முதல் தோழர் ஆகிய அபூபக்கர் சித்திக் அவர்களும், தௌர் என்னும் மலைக் குகையினுள் தங்கியுள்ளார்கள். மூன்று நாட்கள் அந்த மலைக் குகையிலே அவர்கள் தங்கி இருந்தார் கள். தேடுவோர் தேடி ஓய்ந்தபின், அங்கிருந்து அகல்வது என்பது அவர்கள் தம் நோக்கம், இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடங்கள் முற்றும் தேடுகின்றார்கள் கொல்ல நினைக் கின்ற பொல்லா மளத்தினர். இதற்கிடையே ஒரு நிகழ்ச்சி. நமது பாரத மக்கள் அனைவரும் அறிந்துள்ளது போன்ற நிகழ்ச்சிதான். அதாவது, மகாபாரதத்தில் வருவது போன்ற ஆனால் சற்றே மாறுபட்ட நிகழ்ச்சி. தன்மடியிலே, தனது ஆசான் தலை வைத்துத் தூங்கக் கர் ணன் வீற்றிருக்கின்றன். ஒருவண்டு அவனுடைய துடையில் துளை போடுகின்றது. காலை அசைத்தால் ஆசானின் தூக்கம் கெட்டுவிடுமே என்ற எண்ணத்தில் கர்ணன் சகித்துக் கொண் டிருக்கின்றான். அவன்தன் துடையிலிருந்து வெளிப் பட்டோ டிய குருதிபட்டு விழித்தெழுகின்றார் ஆசான். கர்ணன் தன்னை ஏமாற்றி விட்டதாக உணர்ந்து, "தம்மிடம் பயின்ற வித்தை, உற்ற தருணத்தில் உதவாது போகக் கடவது" எனக் கர்ணன் மீது கோபமுற்றுச் சாபம் ஈகின்ருர் குருஜி! இது மகாபாரதக் காப்பியத்தினுள் வருகின்ற கர்ணன் பற்றிய சம்பவம்.