141 நீயும் ஆகிவிட்டனையே, யாது காரணம்? கூறுவாயக" என்று கேட்ட நாயகத் திருமேனியினிடம், அப்பாம்பு உரைக்கின் றது. "நாயகமே! மதீனமாநகர் செல்கின்ற வழியில், நீங்கள் இக்குகையின் கண் வந்து தங்குவீர்கள் என்று முன்னரே நான் அறிந்திருந்தேன். தங்களைத் தரிசிக்கவே இம்மலைப் பொதும் பினில் காத்திருந்தேன். உங்களைச் சந்திக்கின்ற வேளை வந் தது. ஆவலுடன் வெளிவந்த என்னை இவர் தடுத்தார். நான் வெளிப்படுகின்ற வாயில் தோறும் அடைத்து விட்டார். கடைசியாக இருந்த ஒரே ஒரு வழியையும் அவர்தம் காலி னால் மூடியபோது, தனது முயற்சியில் தோல்வி காண்கின்ற மனிதனுக்கு வருகின்ற கோபம் எனக்கும் வந்தது; கடித்து விட்டேன். என் குற்றம் பொறுத்தருள்வீரர்களாக! என்று கூறி, நபிகள் நாயகம் அவர்களின் பாதங்களில் தனது தலையைவைத்துப் பணித்து, அவர்கள்தம் அரிய உயரிய வாழ்த்துதலையும் பெற்று, குகையை விட்டு வெளியேறிச் சென் றது அப்பாம்பு, முதலில், நபிகள் நாயகம் அவர்கள், பாம்பை அழைத்து அதனிடம் வினாவிடுத்தாக உமறுப்புலவர் தருகின்ற பாடலைக் காண்போம்-, அருமறைப் பொருளாய் நின்றோன் அமைந்த பன்னகமே! யாங்கள் வரையின் ஓர் இடுக்கண் உற்று வந்திருர் தனம், அல் லாமல் பரிவுடன் உனக்கு யாது குற்றமும் பயின்ற துண்டோ? தரையின் எம்முன்னோர் முன்னான் இயற்றிய தவறும் உண்டோ? ஏதொரு குறையும் செய்ததின்றி வையி கழ்ந்துண் ணாமல் நீதமில் லவரைப் போல நெடும்புடை யதனில் வந்து ய
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/141
Appearance