24 நபிகள் நாயகம் அவர்கள் மக்கமா நகரினை விடுத்து இங்கு வத்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி எப்படி யோ மதீனமாநகருக்கு எட்டிவிட்டது. அந்நகர மாந்தர் யாவரும் நபிகள் நாயகம் அவர்களை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கின்ருர்கள். பெண்கள் உயரிய மாளிகையின் மேல்தளத்தின் மீது நின்று பெருமானார் அவர்கள் வருகின் றார்களா என நெடுந்தொலைவு வரை தங்களின் பார்வை யைச் செலுத்துகின்றனர். பிள்ளைகள் உயர்ந்தோங்கி வளர்ந் துள்ள மரங்களின் மீது தாவி ஏறி, உச்சிக்குச் சென்று நாயகத் திருமேனி அவர்கள் வரும் திசையின்கண் விழி வைத்தவர் களாகக் காத்து நிற்கின்றனர். இவ்வாறு சில நாட்கள் கடந்த பின்னர், நபிகள் நாயகம் அவர்களும் அபூபக்கர் சித்தீக் அவர்களும் ஒட்டகங்களின் மீதமர்ந்து வருவதை ஒரு யூத இளைஞன் கண்டு உரைக்கின்றான். அனைவரும் அவன் காட்டிய திசையிலே யார்வையைச் செலுத்துகின்றனர். உதயமால்வரைப் பரிதியை நிகர்ப்ப ஒட்டகத்தில் விதியவன்திருத் தோழரும் துணைவரும்விரிபூ உதிருஞ்சோலையில் நனியிசை திசைதிசை ஓங்கப் பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்தயல் போனார். மதீனமாநகரினை நோக்கி நபிகள் நாயகம் அவர்களும் அபூபக்கர்சித்தீக் அவர்களும் ஒட்டகங்களின் மீதமர்ந்து வந்து கொண்டிருப்பதை உமறுப்புலவர்,மேலே உள்ள தேன் தமிழ்ப் பாடலில் சித்திரித்துக் காட்டுகின்றார். ஒட்டகத்தை மலை என்றும், அதன் மீது அமர்ந்து வருகின்ற நாயகத் திருமேனி
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/149
Appearance