159 வேலில்தாக்கிளர் வில்லினில் தாக்கினர்,விரிமுக் கோலிஸ்தாக்கிளர் வாளினில் தாக்கினர் குடங்கைத் தோலில்தாக்கினர் சுரிகையில் தாக்கினர் துரத்திக் காலில்தாக்கிளர் தாக்குறும் பேரமர்க் களத்தில், கேடகத்தையும், தாங்கிய கரத்தையும், கிடந்த சோடிணைப்படும் இரும்பையும், உரத்தையும், துளைத்துள் ஊடுறப்புகுந்து, இருந்தவல் உயிரையும் உருவிச் சாடி, அப்புறம் போயின வீரர்கைச் சரங்கள். இவ்விரு பாடல்களும் போரில் நடந்த தாக்குதல்களையும் அவற்றால் நேர்ந்த விளைவுகளையும் உரைக்கின்றன. குறைந்த எண்ணிக்கையுடையோர்க்கிடையே நடந்த சண்டையாதலின் காலையில் துவக்கிய போர் மாலைக்குள் முடிந்துவிட்டது. அபூஜஹில் முதல், வலீது, உத்பா, உமையா, ஷைபாபோன்ற முக்கியமான தலைவர்கள் உள்ளிட்ட எழுபதுபேர் இறந்து பட்டனர். எழுபது பேர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர். எஞ்சியோர் போர்க்களம் விட்டோடி விட்டனர். நாயகத் திருமேனியார் அணியில் இழப்பு, பதினான்கு பேர்களே! 'போர் முடிந்த களத்தைக் காட்சிப் படுத்துகின்றார் உமறுப் யுலவர்; மூரசமும் அவிந்த, காகளம் அவிந்த, மூரிவெம் பேரியும் அவிந்த புரிகளும் அவிந்த, ஆவணத்தொகுதிப் பாசறை முழக்கமும் அவிந்த திரைகடல் எனும்பே ரோதையும் அவிந்த, வீரர்கள் சேவகம் அவிந்த, அரசரும்அவிந்த, வாகையும் திறனும் ஆண்மையும் அவிந்தன அன்றே. விரைநிரைப் பரியின் பிணக்குவைமலிந்த, நிருபர்கள் உடல்குறை மலிந்த, விரிகதிர்ப் பூணும் ஆரமும்மலிந்த, வெற்றியெம் படைக்கலம் மலிந்த,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/159
Appearance