உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மானத்தை மேலேயுள்ள பாடலில் காண்கின்றோம். பாலையில் நீர் தேடி அலைகின்ற கலைமான்கட்கும் ஈயாரை நாடி இதயம் நொந்த கலைவல்லுநர்கட்கும் உள்ள துன்பத்ப்ை பாலைக்கு உவமித்திருப்பது சிறப்பினும் சிறப்பாம், இப்படிப் பலபாடல்களைச் சுரத்தில் புனல் அழைத்த படலத் தில் பாடியுள்ள உமறுப்புலவர் உம்றாவுக்குப் போன படலத் திலும் பாலையைப் பற்றிப் பாடியுள்ளதையும் கண்டோம். ஆம், கொடும் மனமுடைய மக்கமாநகரத்தாரிடையே ஒப் பந்தம் எழுதி முடித்த பின்னர், மதீனமாநகர் நோக்கிப் பாலை யினூடே தமது தோழர்கள் புடைசூழ நாயகத் திருமேனி வந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்தோம், அந்தப் பாலையில் நாய்களின் வாயிலிருந்து வடியும் நீரினை உண்ண மான்கள் ஓடியதும், மான்கள் ஓடும் போது எழுகின்ற காற்றினை அருந்தப் பாம்புகள் வாய்பிளந்திருந்ததும், அவ் வரவின் வாய்களை வளை என நினைந்து எலிகள் புகுந்ததையும் நகைச்சுவையுடன் உமறுப்புலவர் பாடியிருப்பதைப் பார்த் தோம். பாலையில் வெயிலின் கொடுமையுள்ளபோது காற்றிருக் காது. காற்றுமேவினால் வெப்பமே மேல் எனும் வகையில் பாலை மணலை அள்ளி, கண் காது, வாய் மூக்கென்று பாராமல் நிரப்பி விடும். சில நேரங்களில் பாலையில் எழுகின்ற சூறைக் காற்று, ஆட்களைக் கீழேதள்ளி மணல் கொண்டு மூடி மறைத் துச் சாகடித்துவிடும். இதை நினைவு கூர்கின்ற வகையிலும் புலவர் உமறு பாடக் காண்கின்றோம். தேறரிய தாகவெரு சீழ்உதிரம் ஓடக் கூறுபடு புண்ணில்ஒரு கோவிடுதல் போல மீறுபரலால் அடிமெலிந் தவர்கள்ஆவி சூறையிடல் போல அழல் சூறைவளி வீச இப்பாடலில் உள்ள ஆவி சூறையிடல் போல அழல் சூறைக்காற்று வீச, என்னும் வாசகம், பாலையிலே வீசுகின்ற