உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தான்; "உமது அரசவைப் புலவருடன் யான் புலமைப் போர் புரிய வேண்டும்," என்றான். அரசர் ஆவன செய்தார். அக் காலை எட்டயாபுரத்தின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர் கடிகைமுத்துப் புலவர் ஆவார். குறிப்பிட்ட நாளில் அரசவையில் அறிஞர்களும் புலவர் களும் நிரம்பித் திகழ்ந்தனர். அரசர் வந்தமர்ந்தார்.வாலை வாரிதியும் உரிய காலத்தே வந்து தனக்குரிய இருக்கையில் அமர்ந்தான். அரசவைக் கவிஞரான கடிகை முத்துப் புலவர் வரவில்லை. அவரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பப் பட்டான். அதுபோது அளைக்கண் நுழைந்த இனைஞர் உமறு, அரசவைப் புலவருக்கான இருக்கையில் சென்றமர்ந் தார். அரசர் உள்ளிட்ட அனைவர்தம் கண்களும் உமறையே நோக்கின. "புலமைப் போரைத் துவக்குவோமா?" என்றார் உமறு. யார் இந்தச் சிறுபிள்ளை?" என்று கேட்டான் வாலை வாரிதி. அவ்வுரை கேட்ட உமறு எழுந்தார். 66 'இது, புரவி நடத்திப் போர் புரிகின்ற மன்னர்களும், அறிஞர்களும்,புலவர்களும் வீற்றிருக்கின்ற அரசவை. இங்கே பிள்ளைகள் வரமாட்டார்கள். நாள் அமுதகவி இல்லை. இல்லை! அமுத கவிவானர்களின் அரசன்! அது மட்டிலுமன்று; மாமன்னன் எட்டப்ப பூபதி அவர்களின் அரசவைப் புலவன். என் பெயர் உமறு. இந்த உமறு ஆர்த்தெழுந்து கவி பாடினால், அண்ட முகடுகளும் அதிர்ந்து நடுங்க வேண்டும். இதனை அறிந்து உள்ளச்சம் வையும் பிள்ளாய்!" என்று தன்னைப் 'பிள்ளை' என உரைத்த வாலை வாரிதியை, "பிள் ளாய்!” எனத் திருப்பி விளித்துரைத்தார் உமறு, இவ்வுரை, உமறுதம் வாயினின்றும் ஓர் அரிய கவிதையாகவே வெளிப் பட்டது. சமரதுர சுத்துங்க மனரும்ச பாசென்று சரிகமா சனமீதிலே அமரஒரு ஈரகொம்பு தினமும்சு மாசெல்லும் அமுதகவி ராஜனானே