21 முதுமொழி மாலையைக் கீழக்கரையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலமர்ந்து பாடினார் உமறு என்பர். மாலை என்பதினால் நூறு பாடல்கள் பாடி இருக்க வேண்டும். ஆனால் நமக்குக் கிட்டியிருப்பது எண்பது பாடல்களே! பாடல்கள் அனைத்தும் "முகம்மது நபி (சல்) அவர்களை என்று காண்குவனே!" எனும் ஈற்றடியைக் கொண்டு முடியக் காண்கின்றேம். அறநெறி வழுவாத் தவுத்துறை வேந்தை அருமறைப் பொருளின் உள்பொருளைத் தறைமதி யிட்ட காமியம் உதவும் சற்குணக் கற்பக அடவியைக் குறைவில் ஆனந்தத் துறையிடத்து அமர்ந்த கொண்டவை லோக நாயகரை மறைபுகழ்ந் தேத்தும் ஞான வாரிதியை முகம்மதை என்று காண்குவனே இப்படி. 'என்று காண்குவேன்' என்று காண்குவேன்!" என நூறு பாடல்களைப் பாடி முடித்துப் பள்ளிவாசலிலேயே படுத்து உறங்கிய புலவர் உமறு, தமது கனவில் நபிகள் நாயகம் அவர்களைக் காணுகின்றார். அவர்களுடைய வாழ்த்து தலைப் பெறுகின்றார். தமது வரலாற்றை உமறு தமிழில் பாட வேண்டும் என நபிகள் நாயகம் அவர்கள் கட்டளையிட்ட நிலையில் உமறு விழித்துக் கொள்கின்றார். அதன் பின்னர்ப் பாடப்பட்டதே "சீறாப் புராணக் காவியம்". சீருப்புராணத்தில் 'விலாதத்துக் காண்டம்', 'நுபுவத்துக் காண்டம்', 'ஹிஜரத் காண்டம்' என மூன்று காண்டங்கள் உள்ளன. விலாதத்துக் காண்டம் என்பது, நபிகள் நாயகம் அவர்களின் தலைமுறையில் துவக்கி, பிறப்புக்கூறி, அவர்கள் தம் திருமணம் வரை உரைப்பதாகும்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/22
Appearance