2 தமிழை, சங்க காலத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற் காலத் தமிழ் என வகைப்படுத்துவர். இடைக்காலத் தமிழ் என்பது புராண இலக்கியம் செழித்த காலம், அக்காலப் புலவர்கள், கடவுள் வாழ்த்துப் பாடியே தமது நூலினை யாத் தளித்துள்ளனர். அந்த மரபை யொட்டியும், இஸ்லாமியப் பண்புப்படியும் கடவுள் துதியுடன் சீருப்புராணத்தைத் துவக்கு கின்றார் உமறுப் புலவர். அவர் பாடியுள்ள கடவுள் வாழ்த்துப் பகுதியில் இருபது பாடல்கள் உள. முதலில் உள்ள 'திருவினும் திருவாய்' என்று ஆரம்பமா கின்ற பாடலைக் கடவுள் வாழ்த்து என்பதோடு, பாயிரம் என்று கொள்ளவும் இடமுண்டு. இஸ்லாமியப் புலவர்கட்குக், கடவுள் வாழ்த்துப் பாடுவது என்பது, சர்க்கஸ் வித்தைக்காரன் கம்பியின்மீது நடப்பதினும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய ஒன்றாம். ஆம்! உருவ மற்ற கடவுளைப் பாடுகின்ற அவர்கள், உவமானமாகவும் கூட உருவமுடைய பொருள்களைச் சுட்டாமல் பாடவேண்டும். இந்த மரபு நெறியை உமறு முறையுடன் பிழையின்றிப் பின் பற்றிச் செல்கின்றார். 'திருவினும் திருவாய்' என்று எழும் பாட்டைப் ผล கோணங்களில் ஆய்ந்து பயன்துய்க்க இயலும்.ஆம்,முழுமையாக இந்தப் பாட்டைப்படிக்கும்போது இது கடவுள் பற்றிய விளக்கமாக இருக்கக் காண்கின்றோம் விசாக்கணி படுத்திப் பார்த்தால், இறைவனை உள்ளத்தில் எவ்வாறெல்லாம். பொருத்தலாம் எனக் காணலாம். மூன்றாவ தாக, இப்பாடலைப் பாயிரமாகக் கொண்டு நோக்கினால்தான், .
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/24
Appearance