3 வடமொழி மரபினை யொட்டி, தமிழில் காவியங்கள் தோன்றிய காலத்திலிருந்து கடவுள் வாழ்த்து, நாட்டுப்படலம் நகரப் படலம், ஆற்றுப்படலம்,அரசியற்படலம் என்றெல்லாம், காப்பியக் கதைக்குள் நுழையுமுன்னர்ப் பாடுவது இயல்பாக இருந்து வந்துள்ளது. வாங்கரும் பாதம்நாள்கும் வகுத்தவான் மீகிஎன்பான் தீங்களி செவிக னாரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன் என்பதாகக் கம்பர் நாட்டுப் படலம் இயம்புகின்றார் தமது நூலில், இதிலிருந்து நாட்டுப் படலம், நகரப் படலம், ஆற்றுப் படலம் அரசியற் படலம் என நூலின் நுழைவாயிலில் பாடுவது வடமொழி இலக்கிய மரபென்றாகின்றது. திருத்தக்க தேவர் தம் சிந்தாமணி காப்பியத்தில், காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென்று இசையால் திசைபோய துண்டே என்று ஏமாங்கத நாட்டணி பாடப் போந்ததாக இயம்பிப் பாடுகிறார். இவர்களின் மரபினை யொட்டித் தமிழில் சீறாப் புராணம் பாடப்போந்த உமறுப்புலவரும் நாட்டுப் படலமும் பாடி அளித்துள்ளார். ஆற்றுப் படலம் அரசியல் படலம் என்றெல்லாம் இவர் விரித்துரைக்கவில்லை.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/30
Appearance