உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 . ளார். எனினும் அது அவர் கண்ட கற்பனை நாடேயன்றி அரபு நாடோ தமிழ் நாடோ அன்று எனத் தெளிக.கற்பனையில் கண்ட நாடானதாலே, தம் மனவளத்தை யெல்லாம் அந்த நாட்டின் வளமாக்கிப் பாடியுள்ளார் கவிஞர். சான்றிற்காக ஓரிரு பாடல்களை விரித்துக் காண்போம். தாம் கண்ட கற்பனை நாட்டின் கழனியினூடே நடக்கின் றார் உமறுப்புலவர். அது கார் காலம் போலும்! கழனிகளிலே நடவு முடிந்து பயிர்கள் ஒன்று பத்தாகக் கிளைத்துத் தழைத்துப் பச்சைப் பசேலென்று செழித்தோங்கி வளர்ந்திருப்பதை அவர் தம் கண்கள் காண்கின்றன. அவருடைய புலமை மனம், அப் பயிரின் செழிப்பிற்கு, வளர்ச்சிக்கு உவமானம் கண்டு மகிழ் கின்றது. பாடுகின்றார்; அருமறை நெறியும் வணக்கமும் கொடையும் அனபும் ஆதரவும்கல் லறிவும் தருமமும் பொறையும் இரக்கமும் குணமும் தயவும்சீர் ஒழுக்கமும் உடையோர் பெருகிய செல்வக் குடியோடு கிளையும் பெருத்தினிது இருந்துவாழ் வனபோல் மருமலர்ப் பழனக் காடெரைம்நெருங்கி வளர்ந்தது நெட்டிலை நாற்றே! ஒன்றை ஒருவருக்கு ஈந்தால் ஈந்தவருக்கு அதனைப் பத்தாகப் பெருக்கி அளிப்பதாக இறைவன் உரைத்துள்ளான். இந்த வாசகத்தை அறிந்து அதன்படி நடந்து மனிதர்க ளிடையே அன்பும் ஆதரவும் இரக்கமும் காட்டி அவர்கட்குத் தேவைப்பட்டதை ஈந்து, கடவுளை வணங்கி வாழுகின்ற ஒழுக்கமும் பண்பும் நேர்மையும் உடைய வள்ளல்களின் மனை எவ்வாறு செல்வச் சிறப்போடு மக்கள் சுற்றம் சூழச் சிறந்து பெருகி வாழுமோ அவ்வாறாகக் கழனியில் நடப்பெற்றுள்ள ஒற்றை நாற்றானது பலவாக வெடித்துத் தழைத்தோங்கிச் செழித்திருப்பதாக உமறு பாடியிருப்பது உன்னி யுன்னி