4 சீறாப் புராணக் காப்பியத்தில் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைச் செப்ப முற்படுகின்ற உமறுப்புலவர், நாயகத் திருமேனி அவர்களின் தலைமுறையிலிருந்து ஆரம்பிக் கின்றார். நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாம் என்னும் ஒரு பேரியக்கத்தை விளக்கம் செய்து நிலைபெறச் செய்தவர்கள் ஆதலின், அந்த இயக்கம் தோன்றிய வரலாற்றை உமறு முத லில் கூறவிழைகின்றார். இஸ்லாமியப் பேரியக்கம், நமது நாட் ஈற்குப் புதிய அறிமுகம் ஆனதினால், அப்பேரியக்கத்தின் தன் அதனுடைய தோற்றக் காலத்திலிருந்தே கூறிவிட நினைந்தே உமறு தலைமுறைப் படலம் கூறுகின்றார் எனக் கொள்ளவேண்டும். மேலும், நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைக் கூறுகின்ற முறையும் இதுவேயாம். மையை நபிகள் நாயகம் அவர்களின் தலைமுறைப் படலத்தைப் பாட விழைகின்ற உமறுப்புலவர் மகிழ்வோடும் 'கிராண்ட் ஓப் பனிங்' (GRAND OPENING) என்பார்களே அது போன்று மிகப் பொலிவோடும் ஆரம்பிக்கின்றார். மகிழ்ச்சிக்குக் காரணம், அருளரசும், ஆன்மிக அரசும் நடத்திய வள்ளல் மாநபி அவர்களின் வரலாற்றைச் சொல்லப் போகிறோம் என்பதாகலாம். அத்தோடு, வரண்ட பூமியுடைய மக்க மாநகரைப் பாடிச் சோர்ந்த மளம், வளம் பூத்த மதீனமா நகரினைப் பாடுகின்ற வாய்ப்புக் கிட்டுவதாலும் இருக்கலாம். எனவே சோர்வகன்ற மனத்தோடு, சுறுசுறுப்படைந்த தன்மை யில், துள்ளு தமிழ் நடையில், கம்பீரமாக உமறு தரும் சீறாப் புராணத்தின் தலைமுறைப் படலம் துவங்குகின்றது.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/36
Appearance