38 இது உமறுப் புலவரின் கற்பனையன்று. இஸ்லாம் மார்க்கம் இயம்புகின்ற ஆகம வரலாறு. . முதல் மனிதராகிய ஆதம் ஆண்டவனால் நேரடியாக முழு மனிதனாகப் படைக்கப்பட்டவர். அவர் குழந்தை வடிவம் உற்றவரல்லர். எனவே அவருக்குத் தந்தை இல்லை. தாய் வயிற்றில் கருவாகத் தோன்றி உருவானவரும் அன்று. இது, மரம் முந்தியா வித்து முந்தியா என்னும் கேள்விக்கு, மரமே முந்தியது எனக் கூறுவதாய் அமைந்தது. எனவே தாயின் வயிற்றினின்றும் பிறவா ஆதமே, என ஆண்டவன் அவரை விளித்து, நீர் காணுகின்ற பெயருக்குரிய அந்தஒளி, பின்னாளில், உமது பிள்ளைகளில் ஒன்றாக உலகின்கண் தோன்றற்குரியது. அப்பிள்ளை உலகில் நபிமார்களின் நாயகமாக, இறுதி நபிசாக அமையும். வேத நாயகமாக விளங்கி, அறியாமை இருளில் உள்ள மக்களுக்கு நேர்வழியைக் காட்டுகின்ற ஒளிவிளக்காகத் திகழும் என்று கூறி, மேலும் கேளும் ஆதமே என்று இயம்புவ தாக இப்பாடல் தோற்றமளிக்கின்றது. மீண்டும் நினைவில் கொள்வோம். இது இஸ்லாமிய ஆகமம். இதனை அழகியபாட லாக ஆக்கியுள்ளார் புலவர் உமறு. கலைமறை முகம்ம தென்னும் காரணம் இல்லை யாகில் உலகுவிண் இரவி திங்கள் ஒளிர் உடுக் கணம் சுவர்க்கம். மலைகடல் நதிபா தாளம் வானவர் முதலாய் உம்மை நிலையுறப் படைப்பதில்லை எனஇறை நிகழ்த்தினாளே ! முன்னம் உள்ள பாட்டின் தொடர்நிலைப் பாட்டாக அமைந்ததே இப்பாட்டு. முதற்பாட்டின் இறுதியில் 'புகலக் கேண்மோ' என ஆதத்திற்குக் கூறிய இறைவன், மேலும் விளக்கந் தருவதாக அமைந்தது இப்பாடலின் கருத்து. கலை என்பது மனிதனை மேல்நிலைப் படுத்துவது. அவ்வகை யில் நிகரற்றுத் திகழ்வது வேதம் என்னும் மறை, அந்த முறையே வடிவ முற்றது போன்றவர்களே முகம்மது என்னும் நபிகள் நாயகம். அவர்களே அனைத்தும் தோன்றுவதற்கான
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/39
Appearance