சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் உயர் திரு. சிந்தனைச் செம்மல்— டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின் வரவேற்புரை ஒரு காலத்தில்-முப்பதாண்டுகட்கு முன்பு-தமிழரசுக் கழகத்தின்—இயக்கத்தின் மூத்த தளபதியாய்-எல்லைக்காந்தி யும் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் இணைந்த உணர் வாய்த் திகழ்ந்தவர் கவி.கா.மு. ஷெரிப் தமிழ் நாடு சட்ட லேவையின் இன்றைய மாண்புமிகு தலைவராய்த் திகழும் சிலம்புச் செல்வருக்கு அந்நாள் ஆற்றல்மிக்க வலது கரமாய் விளங்கிய பெருமை கவி.கா.மு.ஷெரிப் அவர்கட்கு உண்டு. அந்நாளிலேயே தன்தனி (சுயமான) ஆய்வுத்திற னும் எழுத்துத் திறனும் பேச்சுத்திறனும் செயல் திறனும் படைத்து விளங்கினார்கள் நம் கவிஞர் பெருந்தகை, 'தமிழ் முழக்கம்' இதழ் வாயிலாக என்போன்றோரும் ஏற்றம் பெற உதவிய கவிஞர் அவர்கள் - அறுபத்தாறாண்டுகள் அனுபவம் பெற்ற அறிஞர் (1) ஒளி (1946) (2) இன்றையச் சமுதாயம் (1951) (3) அமுதக் கலசம் (1964) (4) நபியே! எங்கள் நாயகமே! (1972) (5) இறையருள்வேட்டல்(1978) (6) ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ் (1979) (7) மச்சகந்தி (1972) ஆகிய கவிதை நூல்களையும் மகளே கேள்! என்ற கட்டுரை நூலையும், (1) காதல் வேண்டாம் (2) காதலும் கடமையும் (3) களகாம் பரம் என்ற சிறுகதைத் தொகுப்புக்களையும், (1) நல்ல மனைவி (2) விதியை வெல்வோம் (3) தஞ்சை இளவரசி என்ற புதினங் களையும்,(1) புது யுகம் (2) மன்னவன் காதலி (3) பாசம் தந்த பரிசு ஆகிய நாடகங்களையும் ஏற்கெனவே வெளியிட்டுப் புகழ் பெருக்கியவர் கவி. கா மு. ஷெரிப்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/4
Appearance