உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வர ஆண்டவனிடம் விளக்கம் பெற்ற ஆதம், வானுலகில், சொர்க்கத்தில் இருந்தார். அவருக்குத் துணையாக, ஹவ்வா என்னும் பெண் திருவை இறைவன் படைத்து ஆதத்துடன் இணைந்து வாழுமாறு செய்தான், தீண்டவும் தகாதது என்று இறைவன் எதைச் சுட்டிக் காட்டி அறிவித்தானோ, அதை அவர்கள் தீண்டினார்கள். எனவே, அவ்விருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள். இங்கு னந்து, அழுது, இறைஞ்சி மன்னிப்பு வேண்டினார்கள். ஆண்டவன் மன்னிப்பளித்தான். அதன் பின்பு இருவரும் மக்க மாநகரின் துறைமுகமாயுள்ள ஜித்தா எனும் இடத்தில் இணைந்து இல்லறம் நடத்தினார்கள். இவர்களின் வழித் தோன்றலாக, மக்கமாநகரிலே, அரபிக் குலத்திலே, குறைஷிக் குடும்பத்திலே, அப்துல்லா என்பாரின் மகனாக நபிகள் நாயகம் தோன்றினார்கள் என்கின்ற லாற்றினை உரைப்பது தலைமுறைப் படலம், இப்படலத்திலே நபிகள் நாயகம் அவர்கட்கு முன்னர் வாழ்ந்து, மக்களை நேர் வழிப்படுத்த உழைத்த பல நபிமார்களின் பெயர்கள் காணப் படுகின்றன. அவர்களின் வழியில், இறுதி நபியாகவும், அவர்கள் செயல்படுத்த முயன்று முடியாது நின்றுபட்ட கா எரியத்தை, அதாவது, உருவமற்ற ஓர் இறைவனை ஏற்று மனிதகுலம் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் வாழும் வகை காணப் பிறக்கின்றார்கள் வள்ளல் மாநபி என்று பேசுவது சீறாப் புராணத்தின் தலை முறைப் படலம். மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம்: தத்துவ விளக்கப் பாடல்களில் அமைகின்ற சொற்கள் புற அழகைச் சுமந்தமையா. அக அழகே அவற்றின் அழகாம். சீறாப்புராணத்தின் பாடல்களில் இணைக்கப்பட்டுள்ள சொற் களின் பொருள் நயத்தை - அழகைக் கண்டு மகிழ, இஸ்லாமிய ஆகமப் பயிற்சி தேவை, அவசியம் தேவை!