உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 எனக் கணித்துரைக்கலாயினர். இதனால் இவருக்கு அயல்பதி அரசர்களும் பெண்தர விரும்பி, இறைஞ்சிப் பணிந்து வேண் டினராம். அப்துல் முத்தலிப் என்பார், கோரிப் பெற்ற வரத் தினாலும் பிறந்தவர் அப்துல்லா. வரபதி உலகெலாம் வாழ்த்தும் மக்கமா புரபதிக் கதிபதி என்னும் பூபதி பரபதி அரசர்கள் பணிந்து இறைஞ்சிய நரபதி அப்துல்லா என்னும் நாமத்தார். J இந்த அரிய பாட்டு, அப்துல்லாவின் மேன்மையைப் படம் பிடித்துக் காட்டுவதாகும். அழகிய பாடல். பதினாறு சொற் களைக் கொண்ட இப்பாடலில், ஆறு 'பதி' வரப் பாடியுள்ளார் உமறுப் புலவர். வரபதி, மக்கமாபுரபதி, அதிபதி, பூபதி, பரபதி, நரபதி எனப் பல பதிகளை நம் மனத்தில் பதிய வைக் கின்ற பாட்டு இப்பாட்டு. படிக்கப் படிக்க இனிப்பூட்டும் பாவென இப்பாடலை இயம்புவது பொருந்தும். இந்த அப்துல்லாவிற்கும், மக்கமா நகரிலிருந்து இரு. நூற்றறுபது கல் தொலைவுக்கு அப்பால் உள்ள மதீனமாநகரில் பிறந்து வளர்ந்த ஆமினா என்னும் பெயர் கொண்ட பெண் மா மணிக்கும் அப்துல்லாவின் தந்தையராகிய அப்துல் முத்தலிப், திருமணம் நடத்தி வைத்தார். ஆமினா, தாய் தந்தையரற்ற எத்தீம். எத்தீம் என்பது அனாதை என்பதைக் குறிக்கின்ற அரபிச் சொல். சிறப்பாக, தந்தையை இழந்துவிட்ட பிள்ளையை எத்தீம் என்கின்ற சொல் குறிக்கும். திருமணமாகிவிட்ட மகனை, தனிக் குடித்தனம் ஏற்படுத்தி வாழுமாறு பணிப்பது அக்கால அரபியர்களின் மரபு போலும். எனவே, அப்துல்லா தமது தந்தையின் விருப்பின் பேரிலேயே தனிக்குடித்தன வாழ்க்கையை மேற்கொள்கின்றார். கணவனுக் கேற்ற காரிகையாக வாழுகின்ற ஆமினாவைத் தமது அரிய