6 தமிழ் இலக்கியங்களிலோ, இந்திய இலக்கியங் களிலோ பெற்ற தாயைப் பிரிந்து வேறு ஒரு தாயினிடம் பிள்ளை வளருவது புதிய படைப்பன்று. யசோதையிடம் கண் ணன் வளர்ந்த கதை நாடறிந்த ஒன்றாம். அரண்மனையில் வளர வேண்டிய பிள்ளை ஆசிரமத்தில் வளர்ந்த கதையைப் பெருங்கதை பேசும். சீவகன் பிறப்பும் வளர்ச்சியும் இலக் கிய வாழ்வினர் யாவரும் அறிந்தனவே. இவற்றிற்கெல்லாம் மாறுபட்டது நபிகள் நாயகம் அவர்களின் பால்குடிப் பருவ வரலாறு. ஆம், பெற்ற குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்க இயலா வறுமை வாழ்வு, நபிகள் நாயகம் அவர்களை ஈன்றளித்த ஆமி னாத் தாயாரின் வாழ்வு. ஆரம்பத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளோர், நபிகள் நாயகம் அவர்கட்குப் பாலூட்டியதாக அவர்கள்தம் வரலாறு பேசும். இறுதியில், ஹலிமா என்னும் மாதிடம் நபிகள் நாயகம் அவர்கள் பால் குடித்து வளர்கின் றார்கள், ஹலிமா விவசாயக் குடும்பத்திலுள்ளவர்கள், குனைன் என்ற கிராமவாசி. மழையின்மையால் விவசாயம் பொய்த்துப் போகவே, பிழைப்பு நாடிக் குனைன் என்ற கிராமத்திலிருந்து மக்க மாநக ருக்கு வந்த ஹலிமா, நபிகள் நாயகப் பிள்ளைக்குப் பால் கொடுத்து வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்கள். பின்னர், குனைன் கிராமத்தில் மழை பெய்து செழிப் பேற்பட்ட தறிந்து, குழந்தையைக் குனைன் கிராமத்திற்கே எடுத்துச் சென்று வளர்த்து, ஐந்து வயது நிரம்பியதும் தாயாரிடம் கொணர்ந்து ஒப்புவிக்கின்றார்கள்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/49
Appearance