53 படியின் மீதினில் ஓடுவர், தேடுவர் பதறிக் கடிதில் கல்முழை முள்செறி பொதும்பினும் கவிழ்ந்து நெடிது நோக்குவர், செடியறக் கிளறுவர் நிகரில் வடிவுறும் மகவே எனக் கூவுவர் வருக்தி! இவ்வரிய பாடல், ஹலிமா காட்டினிடையே கைத்தவற விட்டு விட்ட பிள்ளைப் பெருமானார் அவர்களைத் தேடிக் காடெ லாம் அலைந்த நிலையை விளக்குகின்றது. என்ன தேடியும், எங்குத் தேடியும், எவ்வளவு நேரம் தேடினாலும் பிள்ளை கிட் டாது என அறிந்த ஹலிமா மக்க மாநகர் நோக்கி நடக்கின் றார்கள். பிள்ளையின் பாட்டனாரிடம் சென்று, நடந்ததை உரைக்கின்றார்கள். கேட்ட பாட்டனாராகிய அப்துல் முத்தலிப், மணி இழந்த நாகமெனத் துடிக்கின்றார். பதறிக் கதறி அரற்றி அழுகின்றார். ஆட்கள் நாலா பக்கங்களிலும் சென்று தேடி யும் பிள்ளை கிட்டவில்லை. முடிவில், கஃபத்துல்லா என்கின்ற பள்ளி வாசலினுள் சென்றமர்ந்து, இறைவனிடம் முறையிடு கின்றார். பிள்ளை முகம்மது ஊரின் வெளிப்புறத்தே, ஒரு தோப்பில் உள்ளதாக அசரீரி உரைக்க, சென்று கொண்டு வருகின்றார்கள். ஐந்து வயதடைந்த பிள்ளைப் பெருமானார் அவர்கள் ஆமினாத் தாயாரிடம் ஒப்புவிக்கப் படுகின்றார்கள். வளர்ந்த பிள்ளையை எப்படி மேலும் வளர்ப்பது? இது ஆமினாத் தாயார் கவலை. இனிவருவது புனல் விளையாட்டுப் படலம்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/54
Appearance