- 61
கலைத்தடக் கடலே எந்தன் கண்ணிரு மணியே யாமும் அலைத்தடக் கடல்கள் பாவை அணிமனை அடுத்துச் செம்பொன் நிலைத்திட நினைத்து வாங்கி நெறிகெடுந் தூரமெல்லாம் தொலைத்திவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் உ என்று பெருமானார் அவர்களின்பால் அபூத்தாலிப் உரைப்ப தாகப் பாடல் புனைந்து வழங்கியுள்ளார் உமறுப்புலவர். இக் கூற்று வணிகம் புரிய முதலீடு பெறுவதற்கான வழிகூறு வதாக இருந்தாலும், இதுவே, நபிகள் நாயகம் அவர்கட்கும் கதிஜாப் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற வழிவகுப் தாகவும் அமைகின்றது. ஆம்! ஒரு தினம் வணிகத்திற்கு முதலீடு கேட்டுப் பெற, -கதிஜாப் பிராட்டியாரின் அரண்மனை போன்ற இல்லத்திற்குப் பெருமானார் அவர்களையும் தம்முடன் அழைத்தேகுகின்றார் அபூத்தாலிப். பெருமானார் அவர்களின் குணநலம் பற்றி அறிந்திருந்த கதிஜாப் பிராட்டியார், பொருளீந்ததோடு மட்டுமின்றி, சிரியாநாடு செல்லவிருக்கின்ற தமது வர்த்தகக் குழுவின் தலைமைப் பொறுப்பினையும் பெருமானார் அவர் களிடம் ஒப்புவிக்கின்றார். சிரியா நாடு செல்கின்ற வர்த்தகக் குழுவைப் பொதுவிடத்தே மக்கள் கூடி வாழ்த்துரைத்தனுப்பு கின்றனர். கதிஜாப் பிராட்டியார் தம்முடைய கணக்கர் தலை வரான மைசரா என்பவரையும் அக்குழுவினருடன் சேர்த்த னுப்புகின்றார். அவரிடம் கதிஜாப்பிராட்டியார் புகன்றனுப்பு வது பெருமானார் அவர்கட்கு மெய்காப்பாளராகவும் பணி யாள ராகவும் செயல்படுவதோடு, அவர்களின் குண நலன் களையும் நித்தியச் செயல்களையும் முறையே தனக்கு எழுதி அனுப்பவேண்டும் என்பதே யாம். இவற்றை நோக்கும் யாருக்கும் கதிஜாப் பிராட்டியார் பெருமானார் அவர்களை மணந்து கொள்ள உளம் பொருந்தி விட்டார்கள் என்பது புலப்