73 அரபு நாட்டுச் சரித்திரங்களில், கனவுகள் பல நற்காரி யங்கள் நடைபெற உதவியிருப்பதைக் காண்கின்றோம். அக் கனவே இங்கே கைகொடுத்து உதவுகின்றது. ஆம், தூக்கத் தில் அரிய கனவொன்றைக் காணுகின்றார்கள் கதீஜாம் பிராட்டியார். தம் உறவினரும், கனவிற்குப் பலன் சொல்ப வருமான 'வரக்கா' என்பவரை அழைத்து, கனவிற்குப் பலன் கூறுமாறு வேண்டுகின்ருர்கள். அவர் பலன் சொன்னது மட்டு மன்றி, அக்கனவின் பொருளைக் கதீஜாப் பிராட்டியாரின் தந்தையார் இடமும் விரித்துரைத்து, ஆவன செய்யுமாறு அறிவிக்கின்றார். அவர் சொன்னது இதுதான். . இந்தக் கனவிற்கான பலன்,கதீஜா, நபியை மணப்பார் என்பதே! நபி யாகும் செவ்விய குணமும் தகுதியும் அப்துல்லா மகன் முகம்மது என்பாருக்கே உண்டு. உங்கள் மகள் மனத் திலும் அவரை மணந்து கொள்ளும் எண்ணமிருப்பதாகத் தோன்றுகின்றது. காலம் தாழ்த்தாமல் காரியம் ஆற்றுவது நல்லது. கனவுக்கலை வல்லுநரான வரக்கா கூறியதைக் கேட்டு ஆனந்தக் கொழுங்கடல் குளித்தார் குவைலிது. நாயகப் பேரொளியைத் தமது மருகராக அடைவதிலே மகிழ்வுதான் அவருக்கு. ஆனால்.... கதீஜாப் பிராட்டியாரின் தந்தையாரான குவைலிது, செல்வச் சிறப்புடைய சீமான்.அரச வாழ்வினும் அதிஉன்னது வாழ்வினர். அரண்மனையினும் அதிமேலானது அவர்தம் மாளிகை. நபிகள் நாயகம் அவர்கள், ஏழைமட்டிலுமின்றி, அனாதையும்கூட, எப்படி வலிந்து சென்று, "என் மகளை மணந்து கொள்ளுங்கள்” என்றுரைப்பது? இது குவைவிதிற் குள்ள கவலை, காலம் ஓடுகின்றது! நாயகத் திருமேனி அவர்கள், வேறு யாரையேனும் மணம்புரிந்து கொண்டு விட்டால்? நடக்கலாம்; அவ்வளவு நல்லவர்கள் நபிகள் நாயகம் அவர்கள். மேலும் ஷாம் நகர வணிகத்தில் அவர்கள் ஈட்டி வந்துள்ள லாபம் பெரும் புகழைத் தேடித்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/74
Appearance