-76 தந்தையற்று,தமது வளர்ப்பு மகனாக உள்ள நபிகள் நாயகம் அவர்கட்கு, யாருக்கும் கிட்டாத பெரிய இடத்துப் பெண்! அழகு, அறிவு, அடக்கம், பண்பு, நற்குணம் அனைத்தும் நிறைந்த பெண்! மறுத்துரைக்க என்ன இருக்கின்றது? ஆயி னும் அவசரப்படவில் லைஅபூத்தாலிப், நல்லது, யோசிப்போம் என்று கூறி, வல்விருந்தளித்து வழிகூட்டியனுப்பினார் மைசருவை. மைசரு சென்றபின்-, அயர்விலாது உரைத்த சொல்கேட்ட அருளுறை அபுத்தா லிபு புயவரைபூரித்து ஓங்கி, பொருவில் அப்பாசு, ஆரிது வயவரிஹம்சர ஈருய், மன்னும சோதரரை எல்லாம் கயனுற அழைத்து இருத்தி, நடந்தசொல் அனைத்தும்சொன்னார். மைசற சென்ற பின்னர், தம்முடன் பிறந்த சகோதரர்களை அழைத்து, நம்முடைய சகோதரரின் மைந்தருக்குக் கிட்டி வந்துள்ள பெரும் பேற்றினை'விளக்கி உரைத்தார் அபூத்தாலிப், கேட்டு அனைவரும் ஆனந்தத்தில் திளைத்தனர். இன்றே இப் பொழுதே சென்று பேசிமுடித்திடலாம் என்றார் ஒருவர், வேலைக்காரன் சொன்ன சொல்லை நம்பி, மிகப்பெரிய இடத் தில் பெண் கேட்கச் சொல்வது சரிதானா என்றார் இன் னொருவர்.சற்றுமுன்னர் நிலவிய குதூகலம் இப்பொழுதில்லை. என்ன செய்வதித்ற்கு என்ற சிந்தனை எல்லோர் உள்ளிலும் நடந்து விடும் என்றெண்ணிய திருமணத்திற்கு நடுவில் ஒரு தேக்கம், உமறுப்புலவர் கடைப்பிடித்துள்ள யுத்தி, தமிழ் இலக்கியத்தில் மிகவும் புதுமையானது.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/77
Appearance