78 ஹம்சர என்பாரின் மன எழுச்சி இருந்த தன்மையைச் சுட்டுவது போன்று, நடை எழுச்சி கூட்டிப் பா இசைத் துள்ளார் உமறு, ஹம்சா, குவைலிதுதம் மனைவாயிலைச் சென்று சேர்த்தார் என்பதே பாட்டின் பொருள். ஆனால் இதனைச் சொல்லப் போந்த உமறுப் புலவர், மனமகிழ்வும், மனக்களிப்பும் மருங்கு வர என்றும், மறுகுமணி மறுகூடு மறு காது சென்றார் என்றும் சொற்பெய்துள்ள நயம், சிறப்பிற்குரிய தரம். மற்றும் திருமண வீட்டில் இசைநாதம் எழுவது போன்று, பாடலில், நடைநாதம் ததும்புமாறு செய்துள்ளதும் திரும்பத் திரும்பப் பாடி மகிழத்தக்கதாம். தம்முடைய இல்லம் போந்த ஹம்சாவை, மகிழ்வுடன் வர வேற்று உபசரித்த குவைலி தென்பார், வந்தவாறு யாது என வினவுகின்றார். முதியவரின் கேள்வியைப் பயன்படுத்திக்கொண்டு, நபிகள் நாயகம் அவர்களின் சிறப்புக்களையெல்லாம் தொகுத்துரைக் கின்றார் ஹம்சா, ஹம்சாவின் கூற்றிலே, அவர்தம் சொல்லுந் திறம் மட்டுமின்றி, மாப்பிள்ளை வீட்டார், மாப்பிள்ளையின் சிறப்பை விரித்துரைப்பது மரபு என்கின்ற தன்மையும் தொக் கப்பாடுகின்றார் உமறு, இவற்றோடு, படிப்போர் மனத்திலும் நபிகள் நாயகம் அவர்களின் சிறப்பினை நன்கு பதியுமாறு செய்கின்றார். தெரிந்தமறை முறையாலும், தேர்ந்தவர்சொல் தெளிவாலும், தெருண்ட மேலோர் அருந்தவமாய், எம்மினத்தோர் ஆருயிராய், அருமருந்தாய் அப்துல்லாபால் இருந்தமணி யாயுகித்த முகம்மதெனும் விடலைகருத் தினிதுகூறப் பொருந்தமணம் முடிப்பதற்கு வந்தேன் என்றினையமொழி புகல்வதானார்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/79
Appearance