7. பெருமையை' உரை நடையிலும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பரப்பத் தோன்றத் துணைக் காரணம் போலும். கவி.கா.மு.ஷெரிப்பின் 'சீருப்புராணச் சொற்பொழிவு நூலைப் படித்ததன் வாயிலாக எளியேனுக்கு ஏற்பட்ட முதல் பெருநலங்கள் இரண்டு. (1) நபிநாயகத்தின் வரலாற்றை தற்கருப்பஞ் சாறுபோல் பருக முடிந்தது. (2) தேம்பா வணிக்கும் முற்பட்ட சீறாப்புராணத்தின் செய்யுள் நலத்தைத் துய்க்க முடிந்தது. இனி, இவ்வுரை நூலின் உயரிய கொடைகள் சிலவற்றைக் குறிப்பிடல் கடமை. அவ்வகை யில் தலைமையாக எளியேனுக்குத் தோன்றியது கவிஞரின் நடைதலம். ஆசிரியர் கவிதையோடு கதை, நாடகங்களும் எழுதிப் பண்பட்ட வரதாலின் சீறாப்புராண விளக்கத்தை செய்யுளை - நாவல் போல் நிகழ்த்தியுள்ளார். அடுத்துக் குறிப் பிடத்தக்கது ஆசிரியர் காட்டும் இலக்கியக் கொள்கைகள். அவை பொது சிறப்பு என இரு வகைப்படும். சில எடுத்துக் காட்டுகள். இஸ்லாமியப் புலவர்கட்குக் கடவுள் வாழ்த்துப் பாடுவது என்பது ஈர்க்கஸ் வித்தைக்காரன் கம்பிமின் மீது நடப்பதினும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய ஒன்றாம். ஆம், உருவமற்ற கடவுளைப் பாடுகின்ற அவர் கள் உவமானமாகவும்கூட உருவமுடைய பொருள்களைச் சுட்டாமல் பாடவேண்டும். இந்த மரபு நெறியை உமறு முறையுடன் பிழையின்றிப் பின்பற்றிச் செல்கின்றார். (பக்.23) இப்படி ஒரு பாடலைப் பல கோணங்களில் ஈண்டு, காணுந்தொறும் அதன் வடிவில் ஒரு புதுமை தோன்று வதை உணர்ந்து இன்பம் துய்க்குமாறு அமைவதே சிறப் புடைய கவிதையாகும். (பக்.24)
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/8
Appearance