உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 எனினும், உங்களைக் கேளாமல், எவரிடத்தும் பெண் கொள்ளல்- தகாதென்பது என்னுடன் பிறந்தார் அனைவர் தம் முடிவு, ஏனெனில், நீங்கள் அனுபவமிக்கவர். இவ்வூரில் உள்ள எல்லாக் குடும்பங்களையும் அறிவீர்கள். எங்கள் நலனிலும் அக்கறை உடையவர்கள், உறவினரும்கூட எனவே, யார் வீட்டில் பெண் கொள்வது நலம் என்பதுபற்றி, உங்கள் அறிவுரையைக் கேட்டு வருமாறு எனது தமயன் மார்கள் என்னை உங்களிடம் அனுப்பினார்கள். உங்கள் கருத்துவழி நடப்பதாக உரைக்குமாறும் கூறியனுப்பியுள் ளார்கள். இந்நகரில் குறைஷிகள்கம் இனத்தவரில் மதித்தவர்தம் இடத்தில் வாய்ந்த பொள்ளனைய மடவாரைத் தருதுமென அவரவரே புகல்கின் றரால் அன்னவரில் பெரியாரில் மதியாரில் தவத்தோரில் தலைமையோரில் நின்ளையலது இலையெனவே அவருரைத்த மொழியனைத்தும் நிகழ்த்தி யன்றே மாற்றுரை நும் கருத்திலுறும்படி கேட்டு வருதியென மறுவி லாது போற்றியுரைத்தனர். எனது முன்னோரின் உரைப் படியே புகன்றேன். மிக்க தேற்றமுறு மனத்தாய்ந்து நிகழ் காலம் வருங்காலச் செய்கை நோக்கி, ஊற்றமுடன் உரைத் திடுக. அவ்வுரையின்படி நடப்பது உறுதி என்றார். ஹம்சாவின் உரை, அனுபவமும் ஆற்றலும் மதிநுட்பமும் உடைய முதியவரை, குவைலிதைத் திகைப்பிலாழ்த்திற்று. ஆம், ஹம்சா, எம் அண்ணன் மகனார் திருமணம் பற்றிம் பேசவந்தேன் என உரை நல்கியபோது, கதீஜாப் பிராட்டியார் பற்றியே பேச வந்திருக்கின்றார் என எண்ணுவது இயல்பு. எனவே, தம் மகள் விருப்பப்படி, திருமணம் நடைபெறுவதற் கான வேளை வந்துவிட்டதென நினைத்திருப்பார் குவைலிது. ஆனால், 'ஊரில் யார் வீட்டில் பெண் கொளலாம்?' என