13 கதீஜாப் பிராட்டியாரை மணந்து, இனிய வாழ்வு வாழ்ந்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள். கதீஜாப் பிராட்டி யார், நான்கு பெண் மகவிற்கும், மூன்று ஆண் மக்களுக்கும் தாயார் ஆனார்கள். பிள்ளைப் பிராயத்திலேயே ஆண்மக்கள் மூவரும் இறந்துவிட்டார்கள். பெண்மக்கள், நால்வருடனும், தமது அரிய மனைவி கதீஜாப் பிராட்டியாருடனும், இல்லறம் ஓம்பி, இயல்புற நபிகள் நாயகம் அவர்கள் மக்கமா நகரில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அங்குள்ள உலகச்சிறப்புடைய கஃபத்துல்லா எனும் பெயருடைய பள்ளி வாசலைப் புதுப்பிக் கின்ற பணி நடந்தது. அதில் ஈடுபட்டு, பள்ளிவாசல் கட்டு தற்குக் கல்லும் மண்ணும் சுமந்தளித்தார்கள் நாயகத் திரு மேனி அவர்கள். அப் பள்ளி வாசலில், இன்றும் இலங்கிக் கொண்டுள்ள புகழ் வாய்ந்த கறுப்புக் கல்வினை, யார் எடுத்து உரிய இடத்தில்பொருத்துவது என்பதிலே கோத்திரச் சண்டை ஆரம்பமாயிற்று. நடுநிலையாளரின் முயற்சியில், மறுநாள் காலை, கஃபத்துல்லா எனும் பள்ளி வாசலுக்குள், யார் முதலில் வந்து சேர்கின்றார்களோ அவர்கள் அளிக்கின்ற தீர்ப்பிற்குக் கட்டுப்படுவதென முடிவாயிற்று. நபிகள் நாயகம் அவர்கள் தாம் அதன்படி வந்தார்கள். கோத்திரத்திற்கொருவர் என்ற முறையில், அனைவர் தம் உதவியுடன், உரிய இடத்திலே நபிகள் நாயகம் அவர்கள் அக்கல்லினை எடுத்து இருத்தி அமைத்தார்கள். கோத்திரச் சண்டை தோன்றிய சுவடு தெரியா நிலையிலே அழிந்தொழிந்தது. இச் செய்தியைப் பகரும் படலத்தின் பெயர், கஃபத்துல்லாவின் வரலாற்றுப் படலம் என்பதாம். இப் படலத்துடன், சீறாப் புராணத்தில் உள்ள மூன்று காண்டங்களில் முதற் காண்டம் ஆகிய விலா தத்துக் காண்டம் முடிகின்றது. விலாதத்துக் காண்டத்தில்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/89
Appearance