உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 நபிகள் நாயகம் அவர்கள் ஏழை, தாய் தந்தையற்றவர், படிக்காதவர். அவருக்குள்ள சிறப்பெல்லாம் செல்வச் சீமாட்டி யரான கதீஜாப் பிராட்டியாரின் கணவர் என்பதே! இவர் அறிவுரை புகல்வதா? அதை நாம் ஏற்பதா? என அகந்தை கொண்டு அக்கிரமம் புரிந்தவனே அபுஜஹில். இதனை, "கோதில்கற்பகச் செழுங்கொடிக் கொழுங்களிக்கதீஜா மாதுதன்மணம் புரிந்துஅவர் பொருள்தரும்மதமே" அபுஜஹில் கூட்டம் கூறிற்று எனப் பாட்டிசைத்து, உமறு விளக்குவார். ஏழைகளும் மனிதர்களே என உரைத்ததும், எல்லோரும் சமம் என ஏற்றதும், தாம் ஏற்ற கொள்கையை நபிகள் நாயகம் அவர்கள், நடைமுறைப் படுத்தியதும் மக்களைக் கவர்ந்தன; இஸ்லாம் விரிவடைய உதவின. அபுஜஹிலின் அடக்குமுறை வலுவாயிற்று. முடிவில் அந்த அடக்குமுறை. பயனற்று விட்டதைக் கண்ட அபுஜஹில் கூட்டம், ஆசை காட்டி, நபிகள் நாயகம் அவர்கள் மேற்கொண்ட கொஸ் கையை விட்டு விடுமாறு தூதனுப்பிச் சொல்லிற்று. இவ்வாசை வார்த்தையைக் கேட்ட நபிகள் நாயகம். அவர்கள் உரைத்ததாக உமறு தரும் பாடல்.... பரிதி யைக்கொணர்ந்து அணிவலக்கரத்திடைப் பதித்தும். அரிதி னில்சசி கொணர்ந்து இடக் கரத்தினில் அமைத்தும் ஒருமொ ழிப்படஇனத்தவர் ஒருங்குற நெருங்கிப் பொருது அடக்கினும்....... ஈதலால் சிலஇடர்எனை அடுக்கினும் இறையோன் தூதன் யான்எனச் சுருதியை வினக்குவது அலது பேதியாது எனதுஅகம் எளமுகம்மது உரைத்தார். மிக எளிய சொற்கள். ஆனால், நபிகள் நாயகம் அவர்கள், தாம் ஏற்று ஒழுகிய கொள்கையின்பால், அவர்கள் கொண்டுள்ள