பக்கம்:சீவகன் கதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

144

சீவகன் கதை


144 சீவகன் கதை


யினை'அந்தப்புரவிலாவணை'யாகப்பலபாடல்களில் தேவர். அரசியர்கள் யாருக்காக அழகு செய்து, அன்பு கொண்டு வாழ்ந்தார்களோ, அம்மன்னன் துறவை நாடினமையின், தங்களுக்கு மேல் செய்வ தொன்றில்லையேயெனச் சிந்தை தளர்ந்தார்கள்; இன்பம் துய்த்த தங்கள் ஒவ்வோர் உறுப்பினையும் கண்டு கருத் தழிந்து அவர்கள் பாடுகிற பாடல்கள் உளம் உருக்கும்" தன்மையன வாய் உள்ளன. அரசியர் இவ்வாறு உறுப்புக்களையும் தம்மையும் நோக்கி நோக்கித் தளர்ந்து கூறும் உரைகளையும், அவர் தம் நிலையினையும் கண்ட அந்த அரசனது கோயில் மாந்தர் அனைவரும் வருத்தமுற்றனர். அன்று கோயில் இருந்த நிலையைத் தேவர், ‘பண்ணார் பணைமுழவம் பாடுஅவிந்து பன்மணியாழ் மழலை நீங்கிப் புண்ணார் புனைகுழலும் ஏங்கா புனைபாண்டி லிரங்கா வான்பூங் கண்ணூர் ஒலிகவுளக் கிண்கிணியும் அம்சிலம்பும் கலையு மாரா மண்ணார் வலம்புரியும் வாய்மடங்கிக் கோன்கோயில் மடிந்த தன்றே.' மக்களெல்லாம் (2967) மனம் என்று எடுத்துக் காட்டுகின்றார்; இது போன்று இன்னும் சில பாடல்களால் கோயில் பொலிவிழந்த நிலையினை விளக்குகின்றார்; பின்னும் அந்த இராசமாபுரத்து சீவகனது துறவினைக் கேட்டு உடைந்து வாடுவதையும் காட்டுகின்றார். இவர் மக்கள் வருந்தும் வருத்தம் காட்டும் நெறியே, இராமா யணத்தில் இராமன் நாடு பிரிந்த காலத்து அயோத்தி யிருந்த நிலையாகக் கம்பர் காட்டும் பெருங்காட்சிக்கு வழியாய் அமைந்தது என்று எண்ணத் தோன்றும். வ நகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/145&oldid=1484536" இலிருந்து மீள்விக்கப்பட்டது