பக்கம்:சீவகன் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீவகன் கதை சுரமஞ்சரியும்! பல மகளிர் நடுவண் இவர்கள் அழகுடன் திகழ்ந்தார்கள். இவருள், குணமாலை என்பவள் தான் கொண்டுவந்த சுண்ணத்தை அனைவருக்கும் காட்டி, அஃது ஒப்பற்றது என்று உயர்த்திக் கூறினாள். அது கண்ட சுரமஞ்சரியோ, அது சுண்ணம் என்ற பெய ரோடு உள்ள பயனற்ற ஒன்று என்று பழித்துரைத் தாள். குணமாலை, 'அவ்வாறாயின் என் சுண்ணத்துக்கு ஒப்பாக ஒன்றைக் காட்ட முடியுமா?' என்று கேட்டாள். நட்பினராய் இருந்த இருவரும் சுண்ணம் காரணமாக வறுபட்டனர். இருவரும் தத்தம் சுண்ணமே சிறந்த தென வாதிட்டனர். அவற்றின் உண்மையை ஆடவர் அறிந்து கூறின் ஏற்றுக்கொள்ளலாம் என்பது அவர்தம் முடிவு. இருவரும் தத்தம் தோழரிடத்தே சுண்ணத்தைக் கொடுத்து ஆடவரை வினவ விடுத்தனர். பணிப்பெண் டிர் சீவகனை நாடினர். அவனை அடைந்து பலரும் ஆராய்ந்து கூற மாட்டாத அச்சுண்ண வேறுபாட்டினை அவன் தன் அறிவு ஆராய்ச்சி கொண்டு கண்டு, எது சிறந்ததெனக் கூற வேண்டும் என்று வேண்டிக்கொண் டனர். அவனோ, அவற்றை ஆராய்ந்து கூற முடியாது என்றும், சார்பு பற்றிக் கூறின் தவறாகும் என்றும் விளக்கினான்; தான் என்ன சொல்லியும் தையலர் விடாது முடிவு வேண்டவே, ஒரு வகையில் ஆராய இசைந்தான். இரு சுண்ணத்தையும் சோலையில் வாரித் தூவுவதென் றும், எதை வண்டும் தேனுண்ணும் சுரும்பும் பற்றிக் கொள்கின்றனவோ, அதுவே சிறந்ததென்றும் கூறி னான். இரு சுண்ணங்களும் உயரத் தூவப்பட்டன. சுரமஞ்சரியுடையது தரையில் வி ழ, குணமாலையின் சுண் ணம் வண்டுகளுக்கு விருந்தாயிற்று. இந்தக் காட்சியே சிறந்ததை விளக்கிவிட்டமையின் அதை அவர்தம் லைவியரு க் கூறுமாறு சொல்லிச் அகன்றான். த குக் சீவகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/67&oldid=1484545" இலிருந்து மீள்விக்கப்பட்டது