பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகமாலையார் இலம்பகம்143“நீ இங்கே எந்தப் பெயரில் இருக்கிறாயோ விராட பருவத்துக் கதை வேறு விதமாக இருக்குமே என்று அஞ்சி இந்த உபாயத்தைத் தேடினோம்” என்றனர்.

“என்னை ஏமாங்கதத்து இளவரசன் என்று எப்படிக் கூறுகிறாய்” என்று கேட்டான்.

“உன் தாய் விசயமா தேவியைப்பற்றி என்றைக்காவது நீ கவலைப்பட்டது உண்டா?” என்று கேட்டனர்.

அவர்களுக்கு என்று இவ்வளவு செய்திகள் எப்படித் தெரியும் என்று வியந்தான். புத்திசேனன்தான் துப்புக் கண்டு இருக்க வேண்டும் என்று மதிப்பிட்டான்.

“துப்பறியும் சாம்புவே செய்தி என்ன?” என்று கேட்டான்.

“உன் தாயைக் கண்டோம்; உரையாடினோம்; தவப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள்” என்றான்.

பள்ளியில் தங்கி இருக்கிறாள் என்பதை அறிந்தான். “தண்ட காரணியத்தில்” என்றனர்.

அடுத்த கட்டம் தண்டகாரணியம் நோக்கி அனை வரும் பயணம் செய்தனர்; கனகமாலை விரும்பி அவனுக்கு விடை கொடுத்தாள். அவள் தந்தையும் எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ஏழு கோடி கிடைத்தது போலப் பெரு மகிழ்வு கொண்டார்; ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியருக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டோம் என்ற சின்ன வருத்தம் இருந்தது; அவன் ஒரு நாட்டின் ஏக சக்கரவர்த்தி மகன் என்று அறிந்ததும் தனக்கு ஒரு கவுரவம் அடைந்தது குறித்துப் பெருமை கொண்டான்.

யாராவது கேட்டால் “என் பெண்ணை ஒரு பெரிய இடத்தில் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. விசயனும் அவனை