பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்மகள் இலம்பகம்163“மகளிர்க்கு நான் காமனாகக் காட்சி அளிப்பேன்” என்றான்.

“நீ உண்மையிலேயே காமன் தானே” என்று பாராட்டினர்.

சுரமஞ்சரி அவனிடம் பெருமையாகச் சொன்னாள்.

“தெய்வம் என்னிடம் பேசியது” என்றாள்.

அவன் சிரித்தான்.

“ஏன் உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள்.

“உண்மை உறுதியாக இருக்கும் போது நம்பிக்கைக்கு இடமே இல்லை” என்றான்.

அவளுக்கு வியப்பாக இருந்தது.

“எல்லாம் உங்கள் ஏற்பாடா?” என்று கேட்டாள்.

“அறிவழகன் அவன் தான் கோயில் உருவச்சிலையின் பின் குரல் கொடுத்தது. நாடகங்களில் பின்னால் இருந்து குரல் கொடுப்பது வழக்கம்; அந்த உத்திதான் அவன் புத்தியில் உதயமானது” என்றான்.

“வெளியே சொல்லாதீர்கள்” என்றாள்.

“கதவை மூடு” என்றான்.


10. மண்மகள் இலம்பகம்

கந்துக்கடன் வீட்டில் அழுகைக்குரல் கேட்டது; அக்கம் பக்கம் வந்து துக்கம் விசாரிக்கக் கூடி விட்டனர்.

யாராவது அவர்களுக்காகவாவது செத்துத் தீர வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.

“கந்துக்கடன்தான் ஈமக்கடனுக்கு ஆளாகிவிட்டான்” என்று வந்து விசாரித்தனர்.