பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்81


குத்தலாம். அதைத் தாங்காமல் மற்றவர்கள் கத்தலாம்; அதைத் தடுக்க யாரும் முன் வரவில்லை.

குணமாலை முத்துச் சிலிகையில் வந்து கொண்டிருந்தாள். யானையைக் கண்டதும் அதைச் சுமந்தவர்கள் அலறி பொத்து என்று போட்டு விட்டு ஓடி விட்டனர்.

அந்த யானையைத் தடுத்து நிறுத்த எந்தப் பாகனும் அங்கு நிற்கவில்லை. யானைக்குப் புதுவிதமான ஆசை பிறந்தது. அணைக்க அல்ல; அவளை அடித்துக் கொல்ல.

“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்; கந்த கோட்டத்துள் வளரும் கந்த வேளே” என்று ஒரு ஆண்டி அந்தப் பக்கம் பாடிக் கொண்டு சென்றான்.

அதை ஆராய்ந்து கொண்டு அவள் பல்லக்கில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்த யானை தன்னைத் துதிக்கையால் வளைத்துக் கொண்டிருந்தபோது அந்தப்பாட்டுக்குப் பொருள் இவளுக்கு விளங்கியது.

கத்துவதற்கும் முடியாமல் அவளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

பக்கத்தில் இருந்த தோழி ஒருத்தி “ஆடவர் எவரும் இல்லையோ” என்று கூவி அழைத்தாள். அங்கு நடந்து கொண்டிருந்த பாதைவாசிகள் அதைக் கேட்டுத் தம்மை அல்ல என்று மதித்துக் கொண்டனர்.

ஆட்டு மந்தையில் இருந்து ஒரு சிங்கம் திடீர் என்று பாய்ந்து அந்த யானையின் கையில் இருந்த மாலையை எடுத்து விட்டு அது அதன் கையகத்துப் புகுந்தது.

குணமாலை அவனைக் கண்டாள். தான் அகப்பட்டதற்கும் அவள் துடிக்கவில்லை. இந்தப் புதிய ஆடவன் தனக்காகப் பிணை தந்தது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இளைஞன்தான் தன் சுண்ணத்தைப்