பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 113 அவன் ஏமாறவில்லை, இரவில் சரியான சமயம் பார்த்து, கோயிலுக்குள் புகுந்து, உண்டியலை உடைத்துத் திறந்து, பணத்தைக் கீழே கொட்டினான். சிறு விளக்கின் உதவியோடு எண்ணினான். வெள்ளி நாணயங்களும்,சில்லறைக் காசுகளும் நிறைந்திருந்தன. ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகளும் அபூர்வமாகக் கிடந்தன. காந்திமதிநாதன் அவற்றிலே பொறுக்கிச் சேர்த்து, ஆயிரம் ரூபாய் கணக்காக எடுத்துக் கொண்டான். பாக்கிச் சில்லறைக் காசுகளைக் குடத்தினுள் அள்ளிப்போட்டு, இருந்த இடத்திலேயே வைத்து விட்டான். சன்னிதியில் நின்று, கைகுவித்துத் தலைவணங்கிப் பிரார்த்தித்தான். 'உமை யொருபாகம் சாமி அவர்களே, வேறு வழி இல்லை. அதனால்தான் இப்படிச் செய்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். என்னை நீங்கள் நம்பலாம். இது கடன் தான். எத்தனை வருஷங்கள் டோனாலும் சரி; முதலும் வட்டியும் சேர்த்து உங்களுக்குத் திருப்பித் தந்து விடுவேன்’ என்று உறுதி கூறினான். பிறகு, ஆண்டவனே, நீர்தான் எனக்குத் துணை’ என்று பக்தியோடு கும்பிட்டுவிட்டு வெளியேறினான். - அந்த ஊரை விட்டே வெளியேறினான் அவன். அப்போது காந்திமதி நாதனுக்கு வயது இருபத்து இரண்டு தான். முப்பது வருஷங்களுக்குப் பிறகு, மகாராஜ ராஜ: பூர். காந்திமதிநாத பிள்ளை அவர்கள் ஊருக்குத் திரும்பி வந்தார்கள். உடம்பிலே சதை கனத்திருந்தது; வயிற்றில் தொந்தி போட்டிருந்தது. கைகளில் மோதிரங்கள் டாலடித்தன. காதுகளில் வைரக் கடுக்கன்கள் மின்னின. உச்சியில் கொஞ்சம் குடுமியும், முகத்தில் பெரிய மீசையும் அவருக்கு அழகு தந்தன. அழகான மனைவி ஒருத்தி உடன்