பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 13 ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற துடிப்புடைய சிலர் மந்திரிகளுக்கு நெடுந்தந்தி அனுப்பினார்கள். நெடுந் தொலை பயணம் செய்து அவர்களை நேரில் கண்டு முறை விடுவோம் என்று கிளம்பினார்கள். திருவாளர் அனுபவம் சிரீத்தார். மக்கள் நலமும் சோஷலிசமும் பேசிய கட்சியும், அதைச் சேர்ந்த பெரியவர்களும் ஆட்சியில் இருந்த போதும்தான் முயற்சி செய்தீர்கள், என்ன நடந்துவிட்டது? ஆளும் இனம் எப்பவும் பணக்காரர்கள் பக்கம்தான். பணக்காரர்களும் அவர்களுக்கு பக்கபலம்’ என்றார். இளைஞர்கள் கெக்கலித்தார்கள். பாட்டையா, அது அத்தக்காலம்! இப்போ காலம் மாறிப் போச்சு, அரசும் மாறியிருக்கு, மக்களுக்கு தன்மை செய்யவே பிறந்த கட்சியும், மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறவர் களும் ஆட்சிக்கு வந்து விட்ட காலம் இது: என்றார்கள். 'இருக்கட்டுமே! எந்தக் காலத்திலும், ஆட்சி புரிகிறவர் களை ஆட்டுவிக்கிற சக்தி பெற்றிருப்பது பணம்தான்" என்றார் திரு. அனுபவம். இளைஞர்கள் அவரை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, உயிடுக்காகப் போனார்கள், போனதுபோல் திரும்பி ஊர் சேர்ந்தார்கள். அவர்கள் தலைநிமிர்ந்திருக்கவில்லை. குரல் எடுப்பாக விைக்க வில்லை. ‘என்ன? என்ன ஆக்சு? என்ன விஷயம்? ஒரே பொருளைக் குறிக்கும் பலப் பல கேள்விகள் அவர்களைச் சூழ்ந்தன.