பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 O வல்லிக்கண்ணன் இக்கையா தன் தாயுடன் ஊருக்குப் போய்விட்ட பிறகு கூட, இரு குழந்ன்தகளும் சாப்பாட்டில் கொண்ட குசியையும் புதுப் பழக்கத்தையும் விட்டுவிடவில்லை. சிவகாமி எப்போதாவது முரண்டு பண்ணினால், ஒஸ், காக்கா கொத்திக்கிட்டுப் போய்விடும். சாப்பிட்டுவிடு கண்ணு!’ என்று ஏய்ப்பு காட்டவேண்டிய அவசியம் நேரவில்லை. 'இதோ பாரு, மூக்கன் வாறான் என்று சொன்னாலே போதும். அவள் கைகளும் வாயும் வேகமாகச் செயல்புரியத் தொடக்கும். "மூக்கப்பயல் ஒரு மண்ணுக்கும் பிரயோசனப்பட மாட்டான்னு எண்ணினோமே. தம் குழந்தைகள் சாப்பிடக் கற்றுக்கொள்வதற்கு அவன் தானே துணை புரிந்தான்: என்று ஜானகி தன் கணவரிடம் சொன்னான். 'உலகத்திலே எதுவும் பிரயோசனமற்றுப் போவதில்லை. சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும் என்று தெரியாமலர் சொன்ன்: வைத்தார்கள் பெரியவர்கள்?? என்றார் சி.சிதம்பரம் பிள்ளை, மகா ஞானி போல. 鲑