பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புருவநடுவில் மனம்புதைத்து நெடுங்காலம் தவங்கிடப்பினும் அருள் ஒளியோ அருட் பதமோ கிடைக்கப்பெருது எத்தனையோ பெரியோர்கள் ஏமாந்தனர் என்று சுவாமிகளே கூறுகின்றனரே, மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க -திரு. 4: 12:3 அங்ங்னமாக அருள் ஒளி நேர்படுதல் எவ்வாறு இயலும் என்ற ஐயம் எழுகின்றது. அடிகள் இதற்கு விடையாகவும் ஒரு செய்யுள் செய்தனர். மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக் கலையகற்றிக் கருவியெலாங் கழற்றி மாயை விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச் சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றுஞ் சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே - -திரு. 1: 5:56, என்பதால் அறியலாம். உபதேசத்தில் அடிகள் சுத்த உஷ்ணம் பற்றிக் கூறியுள்ளனர். இச்சூடு. நமது உடம்பில் உண்டாகும். இதனை இந்நாளைய மருத்துவக் கலை ஏற்காது. ம. ருத் து வ ரி ன் வெப்பமானிக்குள் இச்சூடு அகப்படுவதில்லை. ஆ ைல் நாட்டு மருத்துவருள் கைதேர்ந்தவர் நாடிபார்த்து உடம்பில் சூடேறிவிட்டது என்பர்.