பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 யுடன் நிறைந்து மேம்பட்டு விளங்கும்போது உடல் ஒளிமயமாகிப் பொன்னுருவாகும். இதுவே அன்புருவம் எனப்படும் சுத்ததேகம். சித்தர்கள் உடல் மாற்றமாகிய இவ்வனுபவத்தை உருவச்சித்தி என்பர். சித்தியென்பது நிலைசேர்ந்த அனுபவம்” என்று அடிகள் கூறுவதும் கருதற்பாலது. இந்நிலை யில் உடலின் அசுத்த பூதகாரிய அணுக்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களும் மாறிச் சுத்தபூதகாரிய அணுக்களாகி விடும். உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் ஒளிமயமே ஆகிவிடுவதால் ஒ விரி யு ட ல் உண் டாகும். இம்மாற்றத்திற்கு ஓர் உவமை காட்டுவாம். தாவர்நூலில் ஒ வளி ச் ேச ர் க் ைக (PHOTO. SYNTHESIS) என்ற உண்மை காணப்படுகின்றது. பச்சை நிறமுள்ள தாவரங்களிலெல்லாம் பச்சை நிறமிகள் என்றும் பச்சையம் என்றும் கூறப்படும் நுண்ணிய பச்சைநிறமான அணுக்கள் உள்ளன. இவைகளே தாவரங்களின் பச்சை நிறத்திற்கு மூல காரணம். இவை சூரியனது வெளிச்சம் வெப்பம் முதலிய ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளும் இயல்புடையன. தாவரங்கள் வேர்களின் மூலம் உட் கொள்ளும் தண் ணிரையும், வான் வெளியில் உள்ள கரிவளியையும் கொண்டு இலைகளிலும் வேறிடங் களிலுமுள்ள பச்சையம் சூ ரி ய ன து ஆற்றலே உட்படுத்திச் சர்க்கரைப்பொருளே உண்டாக்கும். இச்சேர்க்கையின் போது மிஞ்சுகின்ற உயிர்வளி பிரிந்து வெளிப்படும். இவ்வுண்மையை வேதிச் சமன்பாடுகொண்டு எளிதாக விளக்குவர்.