பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பெறுவான். இதனைப் புறப்புணர்ச்சி யென்பர். இது புத்தமுதம் உண்டு சாதகன் பூரிக்குந் தருணம்; எங்கனும் பேரொளி மயமாக இருக்கும். துய ஒளியை நிரந்தரமாகப் பெறுவான். ஊன் உடம்பு பொ ன் னு ட ம் பா. க மாறிப் பொலியும். இச்சிவதுரிய சுக அனுபவத்தை ஆண்டவன் அன்பருக்கே தருவான். ஆதலின் அன்புருவாகி அருளை நாடி நிற்கும் சாதகன் சிவானந்த மயமாகி நிறைவான். குருதுரியங் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம் கூடினேன் பொதுவிலருட் கூத்தாடும் கணவர் மருவிடப்பெற்று அவர்வடிவ நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிரற்ற வாழ்க்கையிலென் தோழி -திரு. 6 : 82; 95 அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் துயவொளி பெற்றுஅழியா தோங்குவடி வானேன் -திரு. 6 : 82 : 99 அருட்ஜோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர் அழகியபொன் மேனியை நான் தழுவிநின்ற தருணம் இருட்சாதி தத்துவங்க ளெல்லாம்போ யினவால் எங்கணும்பே ரொளிமயமா யிருந்தனவாங் கவர்தாம் -திரு. 6 : 82 : 97 துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை அன்பருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி -திரு. 6: 1 : 183