பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வனது இயல்புகளை மிகச் சிறப்பாகத் திருவடிப் புகழ்ச்சியில் பாடியுள்ளனர். நூற்றிருபத்தெட்டு அடியால் மிகுத்துவந்த கழிநெடிலடி ஆசிரியவிருத்தமாக அமைந்துள்ள அத்திருப்பாடலைப்போல த மி ழ் இலக்கியத்தில் வேருெரு பாட்டில்லை. வடமொழிச் சொற்களா லான இந்த விருத்தப்பாவின் முதல் அடி தமிழ் எழுத்துக்களால் யாக்கப்பெற்றுள்ளது. இதில் ஆண்டவனது சிறப்பும், இயல்பும் விதந்து கூறப் படுகின்றன. இங்ங்னங் கூறிய ஒருவரான கடவுளே இரு வரென்றும், மூவரென்றும், ஐவரென்றும் உரைத்து உழல்வது ஏன் ? உடலுக்கு உயிர் ஒன்றுதானே! இரண்டு மூன்று என்று கூறமுடியுமா? என்று அடிகள் வினவுகின்ருர். உருவ ராகியு மருவின ராகியு முருவரு வினராயும் ஒருவ ரேயுளார் கடவுள்கண் டறிமினே வுலகுளிர் உணர்வின்றி இருவ ராமென்று மூவரே யாமென்று மியலுமை வர்களென்றும் எருவ ராயுரைத் துழல்வதென் உடற்குயி ரிரண்டுமூன் றெனலாமே -திரு. 6:128: ! அவனே டவளாய் அதுவாய் அலவாய் நயமா நிலைமிசை நண்ணிய சிவமே * -திரு. 6: 1:943, என்பன காண்க.