பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பன்னிரண் டாண்டு தொடங்கிநா னிற்றைப் பகல்வரை யடைந்தவை யெல்லாம் உன்னிநின் றுரைத்தா லுலப்புரு ததல்ை ஒருசில வுரைத்தன னெனினும் என்னுளத் தகத்தும் புறத்துமுட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி மன்னிய ஜோதி யாவுநீ யறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே --திரு. 6 : 21 : 122 என்பனவற்றை உற்றுநோக்கிளுல் பன்னிரண் டாவது வயதுமுதல் இன்றுவரை நான் படாத பாடுபட்டேன் எனக் கூறினர் ” என்று கொள்ள லாம். எனினும் இன்றுவரை என்பது எந்த நாளைக் குறிக்கும் என்று அறிவதற்கில்லை. அன்றி, சென்ற பன்னிரண்டு ஆண்டுகளாக நான்பட்ட பாட்டை என்னென்று கூறுவேன்’ என்று ஏ ேத ஒரு காலத்தில் கூறினர் என்றுங் கூறுவர். ஆணுல், "பன்னிரண்டு ஆண்டுதொடங்கி” என்று மூவிடத் திலும் தொடக்கத்தைக் கூறுகின்றமையால், பன் னிரண்டாவது வயதுமுதல் என்று கொள்ளுவது ஏற்புடையதாகும். ஒருசில வுரைத்தனன்’ என்றது கொண்டு பிள்ளைப்பெருவிண்ணப்பத்தில் கூறப் படும் நிகழ்ச்சிகள் பெரிதும் அக்காலத்தில் நடந் தனபோலும் என்று எண்ணவேண்டியிருக்கிறது. இந்நாளில் நம் பெருமான் உலகியலில் சிறிதும் மனம்படியாமல் திருவருளே வழுத்துவதே தொழி லாகக் கொண்டிருந்தார். சினங் காமம் சிறிது மில்லாதவர். கருணையும் சிவமும் பொருளெனக்