பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 2208 உ ல க ங் க ளே க் கூறி, விரிக்கிற் பெருகு மென்றனர். ஆகவே, சேக்கிழார் இந்த மெய்ம் மொழியைச் சி ற ப் பா. க இவ்விடத்தில் எடுத் தாண்டதும், ஆண்டவன் அருளால் பெற்ற சிவிகை யில் இவர்ந்த ஞானசம்பந்தர் திருவருளைச் சிறப் பித்து ஒதியதும், இந்நிகழ்ச்சியை இராமலிங்க அடிகள் சன் மார்க்க விளக்கங் கூறவந்த இப் பாடலில் விதந்துரைத்ததும் ஏதோ ஒரு தொடர் புடைய அற்புதமாகத் தோன்றுகின்றது. இனி, இத்திருப்பாடலில் மூலமலப்பிணி தவிர்க்கும் ம ரு ந் து ஒன்று கூறப்படுகின்றது. அதற்குத்தான் அருளனுபவம் என்று பெயர். செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களுக்கு உண் டான மூலமலமாகிய ஆணவம் தவிர்த்தற்கு ஒரே வழி அருளனுபவம் பெறுதல். அருளமுதமுண்டு அருளே அனுபவிக்கும்போது மூலமலம் போகும் என்ற தல்ை ஏனைய கன்ம, மாயா மலங்களும் ஒழியு மென்பதாயிற்று. * பொறியுறும் ஆ ன் ம தற் போதமும் போயிட ’’ எனப் பிருண் டும் கூறுவர். இனி அருளனுபவம் பெறுவதற்குப் பத்தியமாக உயிரனுபவங் கூறப்படுகின்றது. ' உயிரனுபவ மாகிய ப த் தி ய த் து ட ன் அருளனுபவமாகிய மருந்தை உட்கொண்டால் மூலமலப்பிணி தவிரும். இதனைப் பற்றறப் பற்றுவாயாக. இதுவே சத்தியம்’ என்று திருஞானசம்பந்தப் பெருமான் தமக்குக் கருணையால் அறிவித்தருளினர் என்று கூறுகின் ருர். மேலும், ஞானசம்பந்தர் அருள்நெறியில் முதலரசு இயற்றினர் என்பார். உயிரனுபவமாகிய பத்தி