பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பரதன் என் அடிமை அழகிது" என்றாற். ப்ோல இந்திரசித்து 'என் வீரம் அழகிற்றே என்றான். போருக்கு வந்த இந்திரசித்தைக் கண்ட அனுமன், இனி வெல்லுதல் அல்லது தோற்றல் என்னும் இரண்டில் ஒன்று இன்றே தெரிந்து விடும்; இதோ இந்திரசித்து வந்துள்ளான்- என்று எணனுகிறான்: "ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பதுள்ளது இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான்' (பாசப் படலம்-24.) உலகியலில், இரண்டில் ஒன்று' என்று சொல்லும் வழக்காற்றைக் கம்பர் இப்பாட்டில் கையாண்டுள்ளார். இந்திரசித்தன் தேர்ப்படை முழுதும், உழுந்து (உளுந்து) புரளும் நொடி நேரத்திற்குள் சிதையும்படி அனுமன் உதைத்தானாம். 'செழுந்திண் மாமணித் தேர்க்குலம் யாவையும் சிதைய உழுந்து பேர்வதன் முன் நெடு மாருதி உதைத்தான்'. (52) நாம் வாழும் பூவுலகம் சுமார் 24, 480 கல் (மைல்) சுற்றளவு உடையது இது தன்னைத் தானே, ஒரு நிமிடத் திற்குப் பதினேழு கல் (மைல்) வேகத்தில் ஒருமுறை சுற்றிக் கொள்ள இருபத்து நான்கு மணி நேரம் ஆகிறது. ஓர் உழுத்தம் (உளுத்தம்) பயறோ, ஒருமுறை உருண்டு தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கு ஒரு நொடி நேரமும் ஆகாது. அவ்வளவு விரைவில் அனுமன் உதைத் தானாம். அனுமன் இந்திரசித்திடம் அகப்பட்டுக் கொண்டான். அனுமனைக் கயிற்றால் கட்டி இராவணனிடம் அரக்கர்கள் இழுத்துச் செல்கின்றனர். நம்மைக் கட்டுவது போன்ற கயிற்றால் அனுமனைக் கட்ட முடியாதே எவ்வளவு பெரிய