பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 களே தப்பிப் பிழைத்தனவாம். மற்றபடி, கண்ணில் கண்ட ஏனைய கயிறுகளெல்லாம் பயன்படுத்தப்பட்டனவாம். போர் யானை பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த'-என யானைகளின் கயிறுகளாக வல்லி, புரசை என இரண்டு கூறப்பட்டுள்ளன. வல்லி என்பது யானையின் காலில் பூட்டிக் கட்டும் கயிறு, புரசை என்பது யானையின் கழுத்தில் மணியுடன் கட்டும் கயிறாகும். (திருவடி தொமுத படலம்) இலங்கையினின்றும் அனுமன் மீண்டு வந்து இக்கரை யில் உள்ள வானரர்களைக் கண்டான். அங்கதன், சாம்பவான் ஆகியோரை வணங்கினான். எல்லாருக்கும் சீதை வாழ்த்துக் கூறியதாகச் சொன்னான். பின்னர், வானரர்கள் இலங்கையில் நடந்ததைச் சொல்லுக என வினவினர். அதற்கு அனுமன், சீதை உயர்ந்த கற்புடன் இருப்பதாகவும் சூடாமணியை அடையாளமாகத் தந்ததாக வம் கூறினான். தான் அரக்கர்களோடு போர்புரிந்து வென்றதையும் ஊரைக் கொளுத்தியதையும் சொல்ல வில்லை; காரணம் தற்பெருமை பேசலாகாது என்ற நாண உணர்வாம். அனுமன் நடந்தனவற்றைச் சொல்லிக்கூட இருப்பான். ஆனால், கம்பர் காப்பியத்திற்குச் சுவையூட்ட, அனுமன் சொல்லாததாகவும், இலங்கையில் நடந்தன வற்றை வானரர் குறிப்பால் உணர்ந்து கொண்டதாகவும் கூறிக் காப்பியத்தை ஒட்டிச் செல்கிறார். அனும! நீ அங்கே போர் புரிந்திருக்கிறாய் என்பதை உன் புண்களே சொல்கின்றன. நீ அரக்கர்களை வென்றுள் ளாய் என்பதை நீ உயிரோடு திரும்பி வந்துள்ளமையே உரைக்கிறது நீ இலங்கையைக் கொளுத்தி வந்திருக்கிறாய் என்பதை அதோ ஒங்கித் தெரியும் புகையே ஒதுகிறது. அரக்கர்களும் வல்லவர்கள் என்பதை நீ சீதையை மீட்டு வர முடியாமையே காட்டுகிறது-இவற்றையெல்லாம்