பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 இன்னும் கேள்! ஆண்யானைகளே யன்றிப் பெண் யானைகளும் மதம் கொண்டன. அடிக்கப்படாமலேயே முரசு தானாக முழங்கிற்று. முகில்கூட்டம் இல்லாமலேயே வானம் வெடிபட இடித்தது. விண்மீன்கள் உதிர்ந்தன. பகல் இல்லாத இரவு நேரத்தில், இருள் போக, ஞாயிறு ஒளி வீசுவது போல் தோன்றியது. ஆடவர் குடிய கற்பக மாலைகள் புலால் நாற்றம் வீசின. 'பிடிமதம் பிறந்தன; பிறங்கு பேரியும் இடிஎன முழங்குமால் இரட்டல் இன்றியே; தடியுடை முகில்குலம் இன்றித் தா இல் வான் வெடிபட அதிருமால், உதிரும் மீன்எலாம்' (43) "விற்பகல் இன்றியே இரவு விண்டற எற்பகல் எறித்துளது உன்னத் தோன்றுமால்; மற்பக மலர்ந்தநோள் மைந்தர் சூடிய கற்பக மாலையும் புலவு காலுமால்.” (44) தோரணங்கள் அறுந்தன; யானைகளின் மருப்புகள் (தந்தங்கள்) ஒடிந்தன. (பூரண) நிறை குடத்து நீர் கள்ளைப் போல் பொங்கிற்று. திங்களைப் பிளந்து கொண்டு விண்மீன் கள் எழுந்தன. வானம் குருதிமழை பொழிந்தது. தண்டம், ஆழி (சக்கரம்)-வாள்-வில் என்னும் படைக் கலங்கள் ஒன்றேடொன்று போர் புரிந்து கொண்டன: "தோரணம் முறியுமால் துளங்கி, சூழிமால் வாரணம் முறியுமால் வலத்த வாள்மருப்பு; ஆரண மந்திரத் தறிஞர் நாட்டிய பூரண குடத்து நீர் நறவின் பொங்குமால்' (46) 'விண்தொடர் மதியினைப் பிளந்து மீன் எழும்; புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை; தண்டொடு திகிரி வாள் தனு என்றின்னை மண்டமர் புரியுமால் ஆழி மாறுற’’ (47) க-13