பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி

35

3.மாண்புமிகு நீதிபதி தாவீது அன்னுசாமி (David Annusamy) என்பார் புதுவையில் தலைமை நீதிபதியாயிருந்து, பின்னர்-இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாயிருக்கிறார். அவருக்கும் என் நூல்கள் சிலவற்றைத் தந்துள்ளேன். புதுவையில் கம்பன் கழகத்தின் வெள்ளிவிழா 10-5-1990 ஆம் நாள்முதல் நான்கு நாட்கள் நடைபெற்றது. நான்காம் நாள்மாலை நீதிபதி தாவீது அன்னுசாமி என்னைப் பார்த்து, "இன்றைக்கு உங்கள் 'தமிழர் கண்ட கல்வி' என்னும் நூலைத்தான் படித்துக் கொண்டிருந்தேன்"- என்று கூறிப் பாராட்டினார். பக்கத்தில் வேறு நீதிபதிகள் மூவரும் மற்றவர் சிலரும் இருந்தனர். இவ்வாறாக, நீதிபதி அன்னுசாமி ஐயா அவர்களின் அன்பு மழையும் என்னை நனைத்துக் குளிரச் செய்தது.


அடுத்து, தமிழ்ப் பேராசிரியர்கள்-தமிழ்ப் பேரறிஞர்கள் என்மேல் சொரிந்த அன்பு மழையினையும் சுருங்கத் தொகுத்துக் கூறுவேன்:-


1970-காரைக்குடி-கம்பன் விழாவின்போது, நெல்லைப் பேராசிரியர் உயர் திரு. கு. அருணாசலக் கவுண்டர் கூறியது: "எனது முப்பதாண்டு தமிழ்த்துறை வாழ்க்கையில், சுந்தர சண்முகனாரின் 'தமிழ் அகராதிக்கலை" போன்ற தமிழ்மொழி பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூலை யான் படித்த தில்லை".


1974 - காரைக்குடி - கம்பன் விழா - காரைக்குடிப் பேராசிரியர் உயர் திரு. அமிர்தலிங்கனார், புதுச்சேரித் தமிழ் அறிஞர் உயர்திரு. அ. அருணகிரியிடம் கூறியதாக அருணகிரி சு. ச. வினிடம் (சு. ச. சுந்தரசண்முகம்) கூறியது: "உங்கள் நூல் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, 'எப்படி ஐயா இந்த மனுஷன் சு. ச. இவ்வளவு நுட்பமாய் ஆய்ந்து எழுதுகிறார் என்று அமிர்தலிங்கனார்