பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44

மதிப்புரையாளரின் திருவடிகளை வணங்கிக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் அறிஞர்கட்குள் ஒற்றுமை வளர்க! தமிழ் வாழ்க! வணக்கம்.

பிற்சேர்க்கை


'தமிழ் அகராதிக் கலை' பற்றிய மதிப்புரைகள் மேலும் சில வருமாறு:-


இராஜாஜி:- Your தமிழ் அகராதிக்கலை is a most informative and useful Publication. I congratulate you on this valuable production.


டாக்டர் மு. வ.:- இவ்வாராய்ச்சி நூலில் விரிவாக பற்பல குறிப்புகளை உதவியுள்ளார். ஆசிரியரின் உழைப்பும் ஆராய்ச்சித் திறனும் பாராட்டுக்குரியன.


,டாக்டர் மா. இராசமாணிக்கனார்:- அரிய செய்திகள்- புதிய செய்திகள் - மிகுந்த உழைப்பு - ஆழ்ந்த புலமை - மிகவும் அரிய முயற்சி. உண்மை-வெறும் புகழ்ச்சியில்லை.


டாக்டர் வி. ஐ. சுப்பிரமணியம்:- தங்கள் நூல் கிடைத்தது. உட்கார்ந்து படித்து முடித்துவிட்டு எழுதுகிறேன். முயன்றுழைத்துப் பல செய்திகளைத் திரட்டித் தந்துள்ளீர்கள். நிகண்டுகளைப் பற்றிய செய்திகளும் ஒழுங்காகத் தரப்பட்டுள்ளன. அறியாத சில அகராதிகளையும் தந்துள்ளீர்கள். இவற்றை நான் பாராட்டுகிறேன்.


ம. பெரியசாமித்துாரன்:- விரிவாக ஆராய்ந்து நூலை எழுதியிருக்கிறீர்கள். தங்களுடைய முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். விரிவான ஆராய்ச்சி நூல் ஒன்று வரும்போதெல்லாம் என் உள்ளம் பூரித்துப் பொங்குகிறது. தங்களை வாழ்த்துகிறேன்.

– O –