பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று வல்லுநர் இராபர்ட் சியூவெல் (Robert Sewell) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பல்லவராயருள் தொடக்ககால அரசன் பெயர் திருமலைப்பல்லவராயர். கடைசியாக ஆண்டவர் பெயர் செவந்தெழுந்த பல்லவராயர். "மாதாம் படியுண்டு மெய்சிவந் தான் குழல் வைத்திசைத்துச் சேதாம்ப லங்கனி வாய்சிவந் தான் செம் மலர்த்திருவின் சூதாந் தனந்தைத் துரஞ்சிவந் தானைவர் தூது சென்று பாதாம் புயஞ்சிவந் தான்மல்லைப் பல்லவனே." என்று பாடலொன்றில் சிறப்பிக்கப்படும் இவன் முழுப்பெயர் முகுந்த செவந்தெழுந்த பல்லவராயர் என்பதாகும். 'பாடுந் தமிழ்க்குச் சிவந்தெழுந் தான் மல்லைப் பல்லவர்கோன் காடுஞ் செடியுந் திரியா திரட்டைக்கடுக்கன் செய்து போடும் பொழுதென்ன பூட்டக மோவற்பப் புல்லரைக்கொண் டாடும் பொழுதிரு கன்னத்திலே நின்றடிக்கின்றவே' -எனும் பாடலில் போற்றப்பட்டுள்ளது போலவே செந்தமிழ்ப் புலவர் பலரை ஆதரித்தவன் இச்செவந் தெழுந்தான். புலவர் ஒருவரால் 'சிவந்தெழுந்த பல்லவனுலா என்றொரு சிற்றிலக்கியம் இவர் மீது பாடப்பட்டுள்ளது. இவரது ஆளுகைக்குட்பட்ட நம்புகுழி எனும் ஊரில் செட்டிமார் பலர் வசித்து வந்தனர். அவ்வூர்த் தெருக்களில் பிற ஆடவர் அனுமதிக்கப் படுவதில்லை. பெண்கள் கோஷாப் பெண்கள் போல வாழ்ந்து வந்தனர். 'குளக்காவி மலர்த்தொடையான் சிவந்தெழுந்த பல்லவனைக் கூடா நாளில் இளக்கார மோபிரிந்த வாறுகண்டோ நானேழை யென்று தானோ உளக்காத றுண்டுகோல் பனிநீர்நெய் 114