பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாளைக்கி சட்ட சபை, பார்லிமெண்டுன்னு நம்ப பேரை நார் நாரா இழுத்துக் கிழிச்சுப் புடுவாங்க இவங்களை எல்லாம் கட்டி அழுகனும்னு நம்ப தலை எழுத்து. வாங்க சிஸ்டர்.. நாம்ப போயி ரெண்டு பேஷண்டுகளைக் கவனிக்கலாம். (காட்சி முடிவு) காட்சி 8 (கருப்பண்ணன், சின்னான் இருக்குமிடத்திற்கு டாக்டர் வருகிறார். இளைஞன் அசையாமல் அலங்கோலமாகக் கிடக்கிறான்.) நர்ஸ்: டாக்டர் மூணு நாலு மணி நேரத்துக்கு முன்னால வபித்துவலின்னு இந்தப் பேஷண்டை அட்மிட் பண்ணினோம்! வயித்துவலின்னு கத்தினானேன்னு ஒரு அனால்ஜின் இஞ்சக்ஷன் குடுக்கலாமின்னு எடுத்துக்கிட்டு வந்தேன். ஒடம்பு சில்லிட்டுப் போயிருக்கு... நோ பல்ஸ் டாக்டர். - (டாக்டர்டெஸ்ட் செய்துவிட்டு. கையைக் கீழேபோடுகிறார்) டாக்டர்:- சிவியர் அப்பெண்டிஸைடின் பர்ஸ்ட் ஆகியிருக்கு. ஒடனே ஆப்ரேஷன் பண்ணியிருக்கணும். இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? ஒடனே எனக்குச் சொல்லி யனுப்பிச்சிருக்க வேணாம் ஒங்களோட carelessnessனால ஆஸ்பிடலுக்கு கெட்டபேரு! (ஸ்டெதஸ்கோப்பை மடக்கி எடுத்துக்கொண்டு கருப்பண்ண ரிைடம் திரும்பி) ஏன்யா ஒனக்குப் o புத்திவேணாம்? இவ்வளவு சீரியஸ் ஆனதுக்கப்பறம் இங்கே கொண்டு வரது? அப்பறம் ஆஸ்பத்திரிக் காரங்க சரியா கவனிக்கலைன்னு எங்களைத் திட்டறது. i cat do anything, Let them take the body (டாக்டர் நர்ஸ் விவாதம்) - டாக்டர்:- You are so careless. If I observe, this again, I will see that you will be discharged from service. (டாக்டர்போகிறார்.) 53