பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

]10 சுரதா ஓர் ஒப்பாய்வு ثاني சங்கீதக் குரலுடையோன் எட்டி என்பான் தனித்தமிழில் மருதப்பண் பாட, வேலூர் வெங்கோடன் வெண்காந்தள் அரும்பு போன்று விளங்கிய கூர்க் கொழுமுனையால் சேறு செய்தான்.' மேற்கண்ட விருத்தங்களில் 'அதவத்துர், ஒவம்மாள், வெங்கோடன்' என்னும் மூன்று சொற்களும் எதுகைக்காகச் சுரதாவால் படைத்துக் கொள்ளப்பட்ட புதுச்சொற்கள். 'காதல் மேகம்' என்னும் கதைக்கவிதையில் தலைவன்தன் காதற்கிழத் தியை, முப்பாலே! கரிக்காத கடலே! செம்பொன் முத்திரையே! முழுமதியே! என்றன் வாய்க்குத் தப்பாத மூவசைச் சீர்க் கனியே! : என்று ஒரிடத்தில் விளிக்கிறான். தம் வாய்க்கு மூவசைச்சீர் தப்பாது என்பதில் சுரதாவுக்கு அளவற்ற நம்பிக்கை. எண்சீர் விருத்தத்தில் அவர் வியக்கத் தக்க பாணிகளைக் கையாண்டிருக்கிறார். படிக்கும்போது அவற்றின்சுவையில் நாம் நம்மை மறந்துவிடுவோம். இனிமேலோர் மயிலில்லை; சாயல் இல்லை; இனிமேலோர் மணியில்லை; ஒளியும் இல்லை. இனிமேலே நிறத்தாலே கிளர்ச்சி செய்ய இந்நாட்டில் குங்குமத்தின் குவியல் இல்லை