பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఱ్ఱకి சுரதா ஒர் ஒப்பாய்வு 123 கண்ணிக் கதை - 1 அவள் அழகி ஆட்டனத்தி மனைவி போல! அவன் அழகன் ஆதிமந்தி கணவன் போல! அவன்கவிஞன்; அவன்பெயரோ அகில்கான். சொல்லை அமுதாக்கும் அவள்பெயரோ ஜையுஉன் னிஸ்ஸா. அவனுக்கும் அவள்மீது காதல், அந்த அரசாங்கக் கவிஞனுக்கும் அவள்மேல் காதல். அவள்வருவாள் அன்றாடம் தோட்டத் திற்கு! ஆணழக னும்வருவான் தொடுவ தற்கு! அன்றோர்நாள் அவன்வந்தான்; அவளும் வந்தாள். 'அன்னமெங்கே? குயில் எங்கே? அன்பே' என்றான்; 'அன்னம்என் நடைகண்டு ஒளிந்த தென்றாள் 'அக்குயிலோ, குரலில்குடி யிருக்கு தென்றாள். 'தென்னையிலே செவ்விளநீர் இரண்டைக் காணோம்; திருட்டுத்தான் போயிருக்க வேண்டும் என்றான். 'நன்றாகப் பாருங்கள் தெரியும் என்று நங்கையவள் ஆடைதனை நழுவ விட்டாள். கோடிமலர் அழகுதனை முகத்தின் மூலம் கொடுத்துதவும் என்கண்ணே! வண்ணப் பெண்ணே! கூடல்உண்டு, ஊடல்உண்டு நமக்குள்; காதல் கூட்டலுண்டு, பெருக்கலுண்டு, கழித்தல் இல்லை. மூடலுண்டு, திறத்தலுண்டு, முத்தம் உண்டு. முத்தத்தில் பலபறவைச் சத்தம் உண்டு. பாடலுண்டு, ஆடலுண்டு; தாகம் தீர்க்கும் பகுதியுண்டு, விகுதியுண்டு, விகார மில்லை.