பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கவிஞர் முருகு சுந்தரம் முன்னேறு முன்னே றென்று முழங்கிய பாவேந் தர்க்குப் பொன்னாடை போர்த்திச் சான்றோர் பொற்கிழி அளித்த துண்டு. தென்னாடு துதிக்கும் அந்தச் சிவனுக்குச் சான்றோர் யாரும் பொன்னாடை போர்த்த துண்டோ? பொற்கிழி அளித்த துண்டோ? ஏடுடைப் புரட்சிப் பாடல் எழுதிய பாவின் வேந்தர் ஒடையில் குளித்த துண்டே! உடைகளைத் துவைத்த துண்டே! காடுடைப் புழுதி பூசும் கபாலியர் குளித்த துண்டோ? தோடுடை செவியன் வேங்கைத் தோலுடை துவைத்த துண்டோ? வடியாத செந்தேன் இல்லை. வற்றாத தடாக மில்லை. அடையாளம் புலித்தோ லாடை ஆயினும் கிழியக் கூடும். உடையது கிழிந்தால் வேறோர் உடையுண்டோ சிவனி டத்தில்? கிடையாதே பாவேந் தர்க்குக் கிடையாதே வேட்டிப் பஞ்சம்!